அமெரிக்கா | காணாமல் போன 20 வயது இந்திய மருத்துவ மாணவி!
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கோணங்கி குடும்பம், 2006 முதல் அமெரிக்காவில் நிரந்தரமாக் வசித்து வருகிறது. இந்த நிலையில், பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மாணவியான சுதிக்ஷா, வசந்த விடுமுறைக்காக புன்டா கானாவுக்குச் சென்றதாகவும், அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து டொமினிகன் குடியரசின் தேடல் மற்றும் மீட்புப் படையான டெஃபென்சா சிவில், “புண்டா கானாவில் காணாமல் போவதற்கு முன்பு அவர் ஒரு ஆணுடன் கடைசியாகக் காணப்பட்டதாகவும், பின்னர் அந்த ஆண் மட்டுமே தனியாக திரும்பியதாகவும் சிசிடிவி மூலம் தெரிய வந்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சுதிக்ஷா நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகம் டொமினிகன் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே, அந்த மாணவி குறித்து தகவல் தெரிந்தவர்கள் லௌடவுன் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது.