கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாகிஸ்தானியர்களை காப்பாற்றிய இந்திய கடற்படை - 36 மணிநேரத்தில் திக் திக்!

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பல் துரிதமாக செயல்பட்டு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 பேரை பத்திரமாக மீட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 36 மணி நேரத்தில் இரண்டு கொள்ளை முயற்சியை இந்திய கடற்படை முறியடித்திருக்கிறது.
போர்க்கப்பல்
போர்க்கப்பல்ட்விட்டர்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பல் துரிதமாக செயல்பட்டு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 பேரை பத்திரமாக மீட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 36 மணி நேரத்தில் இரண்டு கொள்ளை முயற்சியை இந்திய கடற்படை முறியடித்திருக்கிறது.

இதுதொடர்பாக இந்தியக் கடற்படை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேற்று (ஜன.29) சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில் இருந்து அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலைக் கடத்த ஆயுதம் ஏந்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள் 11 பேர் முயற்சி செய்தனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் துரிதமாகச் செயல்பட்டு ஈரானிய மீன்பிடி கப்பலை மீட்டது. அதிலிருந்த 19 பேரும் மீட்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் இவ்வாறாக கைப்பற்றப்படும் படகுகளைக் கடத்தலுக்குப் பயன்படுத்தும் கொள்ளையர்களின் முயற்சியும் முறியடிக்கப்பட்டுள்ளது. தவிர, கொச்சியில் இருந்து 850 நாட்டிக்கல் மைல் தொலைவில் தெற்கு அரேபியக் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிக்கும் இந்திய போர்க் கப்பல்கள் கடற்கொள்ளையர்களைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: விமானப் பயணத்தில் திடீர் உடல்நிலை பாதிப்பு: ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால்!

முன்னதாக, ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த ஈரானிய மீன்பிடி படகை சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர். இந்த தகவல் கிடைத்தவுடன், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இந்திய போர்க்கப்பல், சோமாலிய கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தது.

ஈரான் மீன்பிடி படகு FV இமான் மற்றும் அதிலிருந்த17 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து தற்போது 19 பாகிஸ்தானிய மீனவர்களுடன் கூடிய மற்றொரு கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் வசமிடமிருந்து இந்திய போர்க்கப்பல் மீட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க: செல்லாத 8 வாக்குகள்; ஜெயித்த பாஜக வேட்பாளர்.. என்ன நடந்தது.. சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடியா?

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com