8,300 கோடி ஊழல்! இந்திய-அமெரிக்க தொழிலதிபருக்கு 7.5 ஆண்டுகள் சிறை; USAவை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு!

இந்தப் பணமோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியான ரிஷி ஷாவுக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
ரிஷி ஷா
ரிஷி ஷாஎக்ஸ் தளம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி ஷா, அமெரிக்கத் தொழிலதிபர்களில் ஒருவர். இவர், கடந்த 2006ஆம் ஆண்டு அவுட்கம் ஹெல்த் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம், மருத்துவமனைகளில் சுகாதார விளம்பரங்களை, பிரபலமான பல மருத்துவ நிறுவனங்களின் ஆதரவுடன் செயல்பட்டு ஒளிபரப்பி வந்தது.

இதனால், அந்த நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் பெரிய வளர்ச்சியை எட்டியது. குறிப்பாக, 2016ஆம் ஆண்டில் ரிஷி ஷாவின் நிகர சொத்து மதிப்பு 4 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்தது.

இந்த நிலையில்தான் ரிஷி ஷாவின் நிறுவனத்தின் மோசடி வேலைகள் வெளியில் வர ஆரம்பித்தன. அதைத் தொடர்ந்து கோல்ட்மேன் சாக்ஸ், ஆல்பாபெட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் ரிஷி ஷா நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு தொடர்ந்தன.

இதையும் படிக்க: 2 மணி நேரத்திற்கு மேல் பிரதமர் மோடி உரை.. முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சிகள்! கண்டித்த சபாநாயகர்!

ரிஷி ஷா
சமூக ஆர்வலருக்கு தொலைபேசி மூலம் வந்த அழைப்பு.. புதையல் தங்கம் விற்பதாக புதுவித மோசடி!

நிறுவனத்தின் இணை நிறுவனரான ரிஷி ஷா, 12க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த அமெரிக்க நீதிமன்றம், ரிஷி ஷாவின் விளம்பர ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் (அதாவது சுமார் ரூ.8,300 கோடி) மோசடி செய்திருப்பதை உறுதி செய்துள்ளது. இந்தப் பணமோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியான ரிஷி ஷாவுக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் இணை நிறுவனர்களான பிராட் பர்டி, ஷ்ரதா அகர்வால் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். அதன்படி குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷ்ரதா அகர்வாலுக்கு 3 ஆண்டுகளும், பிராட் பர்டிக்கு 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களும் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா மோசடி அமெரிக்காவையே உலுக்கியுள்ளது.

இதையும் படிக்க: அதானி விவகாரம்| செபி அனுப்பிய நோட்டீஸ்.. புதிய நிறுவனத்தை இழுத்துவிட்ட ஹிண்டன்பர்க்!

ரிஷி ஷா
இன்ஸ்டா வழியே முன்னாள் ராணுவ வீரரிடம் பண மோசடி - லட்சங்களில் பணத்தை இழந்த சோகம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com