\
ukraine attack russia oil sources
ukraine attack russia oil sources Reuters

ரஷ்யாவை அதிரவைத்த உக்ரைன்... அதிர்ந்து நிற்கும் அமெரிக்கா : கோபத்தில் கத்திய டிரம்ப் !

ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ரஷ்யா மீது தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
Published on
Summary

உக்ரைன்–ரஷ்யா போர் நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் நிலையில், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி வருமானமே போருக்கு முதுகெலும்பாக உள்ளது. இதை இலக்காகக் கொண்டு உக்ரைன் கடந்த ஒரு வருடமாக எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த உக்ரைன் தற்போது அதில் இருந்து மீண்டு ரஷ்யா மீது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த போரை ரஷ்யா தொடர்ந்து முன்னெடுத்து செல்ல, அந்நாட்டின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி முக்கிய காரணமாக விளங்கி வருகிறது. அதாவது, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானமே ரஷ்யா தொடர்ந்து போரில் ஈடுபட முக்கிய காரணமாக உள்ளது. இதனால் ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைத்து உக்ரைன் கடந்த ஒரு வருடமாக தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

Reuters
ukraine attack russia oil sources
60 பேரில் ஒருவருக்கு HIV! அழகிய நாட்டை அதிரவைத்த அவசரநிலை! அதிர்ச்சி பின்னணி என்ன?

இந்த தாக்குதல் காரணமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி திறன் குறைந்துள்ள நிலையில், இது சர்வதேச வர்த்தகத்தில் கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கும் காரணமாக திகழ்ந்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், உக்ரைனின் இந்த நடவடிக்கை உலகளாவிய பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக கடந்த வாரம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் அமெரிக்காவின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத உக்ரைன் அரசு, செப்டம்பர் 20-ம் தேதியன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்களை கொண்டு ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் கட்டமைப்புகள் மீது அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது.

Reuters
ukraine attack russia oil sources
ஈரானின் "CODE 100" எச்சரிக்கை? அமெரிக்கா, இஸ்ரேலுக்கு திடீர் அலர்ட்! என்ன நடந்தது?

இந்த தாக்குதலை உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு தரப்பும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது. மேலும் உக்ரைனுக்கு கடும் பதிலடி தரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனடியாக ரஷ்யாவின் டீசல் சுத்திகரிப்பு ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும், இது போன்ற தாக்குதல்களால் உலகளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு விலையேற்றம் உண்டாகிறது என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

ukraine attack russia oil sources
உத்தரகாண்ட்| போலி இடஒதுக்கீடு சான்றிதழ் மூலம் MBBS சேர்க்கை.. 8 பேர் மருத்துவ படிப்பு ரத்து!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com