சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வலதுகரமாக செயல்பட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமத் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார். பதவியில் இருந்தபோது அரசு ரகசியங்களை வெளியிட்டதாக கூறி குரேஷியை இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் கைது செய்தனர். 67 வயதாகும் குரேஷி, இம்ரான் கானின் தெரீக் இ இன்சாஃப் கட்சியின் துணைத் தலைவர் ஆவார்.
இதற்கு முன்பு தேர்தலில் முறைகேடு செய்ததாக கூறப்பட்டு தொடரப்பட்ட வழக்கில் மே 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் குரேஷி, ஜூன் 6 ஆம் தேதி விடுதலையானார். தற்போது குரேஷி வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.