\
Netanyahu - Eyal Zamir
Netanyahu - Eyal ZamirHaim Zach / GPO

சரியும் ராணுவம்.. ஈரானுக்கு சாதகமா?.. தவிக்கும் இஸ்ரேல் பிரதமர்?

இஸ்ரேல் ராணுவம் ஆள் பற்றாக்குறையினால் முடங்கும் அபாயமுள்ளது என்று அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
Published on
Summary

இஸ்ரேல் ராணுவம் பல முனைகளில் போராடி வருவதால், ஆள் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி எயல் ஜமீர், பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் ராணுவத்தின் நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த மாதம் 28-ஆம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கியது. இரு தரப்புக்குமான போர் 4 வரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவுடன் எத்தகைய பேச்சுவார்த்தையிலும் தாங்கள் ஈடபடவில்லை என ஈரான் திட்டவட்டமாகக் கூறியது. தொடர்ந்து தாக்குதலானாது இரு தரப்பிலும் நடந்து வருகிறது.

ஈரான் மீதான தாக்கிதல்
ஈரான் மீதான தாக்கிதல்web

இந்த நிலையில், ஒரே நேரத்தில் பல முனைப் போர்களை எதிர்கொண்டு வரும் இஸ்ரேலிய ராணுவம், கடுமையான ஆள் பற்றாக்குறையால் முடங்கும் அபாயத்தில் இருப்பதாக அந்த நாட்டு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எயல் ஜமீர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய எயல் ஜமீர், ராணுவத்தின் தற்போதைய நிலை குறித்துப் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், ராணுவம் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்நோக்கி இருப்பதாகவும், தான் "10 சிவப்புக் கொடிகளை" உயர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Netanyahu - Eyal Zamir
அதிவேகமாகப் பரவும் 'சிக்காடா' வைரஸ்.. அறிகுறிகள் என்ன? கொரோனா போன்று ஆபத்தானதா?

இஸ்ரேலிய ராணுவத்திற்கு தற்போது சுமார் 12,000 வீரர்கள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும், போதிய வீரர்கள் இல்லாததால் தற்போதைய செயல்பாடுகளைத் தொடர்வது கடினம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நெருக்கடியைத் தவிர்க்க, கட்டாய ராணுவச் சேர்க்கை சட்டம், ரிசர்வ் படைச் சட்டம் ஆகியவற்றில் அவசர மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும், கட்டாய ராணுவப் பணி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எயல் ஜமீர்
எயல் ஜமீர்x

காசா, லெபனான் மற்றும் ஈரான் எனப் பல முனைகளில் போர் நீடிப்பதால் ராணுவத்தினர் கடும் களைப்படைந்துள்ளதாகவும், குறிப்பாகத் தன்னார்வ வீரர்கள் தொடர்ந்து போர்க்களத்தில் இருப்பது சாத்தியமற்றது என்றும் அவர் எச்சரித்துள்ளார். நடந்து வரும் போரில் இஸ்ரேல், ஈரான் மற்றும் லெபனான் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருவதால் ஈரானும் பதில் தாக்குதலை வலுவாக கொடுத்து வரும் இந்த சமயத்தில் இஸ்ரேல் இராணுவ தலைமை தளபதியின் இந்த கருத்து ஈரானுக்கு சாதகமாகவே அமைத்துள்ளது.

Netanyahu - Eyal Zamir
ஈரான் போரின் தாக்கம்.. மருத்துவமனை, மருந்து பில்கள் விலை உயரும் அபாயம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com