IDF investigate about Israeli soldier breaks Jesus statue
israeli soldier breaks jesus statueweb

இயேசுவின் சிலையைச் சிதைத்த இஸ்ரேலிய ராணுவ வீரர்.. லெபனானில் பெரும் சர்ச்சை!

லெபனான் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில், இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையினைச் சுத்தியலால் சிதைப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Published on
Summary

இயேசு சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் லெபனானில் மத, சமூக பதற்றத்தை அதிகரித்துள்ளது. டெப்ல் கிராம கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திய இந்த செயலை நகராட்சித் துணைத் தலைவர் மரூன் நாசிஃப் கடுமையாக கண்டித்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைக்கும் நடவடிக்கைகளில் மத தலங்களுக்கு தீங்கு விளைவிப்பது தங்கள் கொள்கை அல்ல என இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்து, சிலையை சீரமைக்க ஒத்துழைப்பதாக கூறியுள்ளது.

லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே, இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையினைச் சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இஸ்ரேல் எல்லையோரம் அமைந்துள்ள கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் டெப்ல் (Debl) என்ற கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சிலுவையிலிருந்து கீழே விழுந்திருந்த இயேசு கிறிஸ்துவின் சிலையின் தலைப் பகுதியை, இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் சுத்தியல் போன்ற கருவியால் தாக்கும் காட்சி அந்தப் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. இந்தச் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்தும், இது சமீபத்தில் தான் எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் இஸ்ரேலிய ராணுவத்தின் வடக்கு கமாண்ட் (Northern Command) பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

IDF investigate about Israeli soldier breaks Jesus statue
போரில் சேதம்.. அமெரிக்காவை நம்பியதன் விளைவு.. நஷ்ட ஈடு கேட்கும் அரபு அமீரகம்!

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடவ் ஷோஷானி (Lt. Col. Nadav Shoshani), இந்தச் செயல் இஸ்ரேலிய ராணுவத்தின் விழுமியங்களுக்கும், அவர்கள் கடைபிடிக்க வேண்டிய தார்மீக நெறிமுறைகளுக்கும் முற்றிலும் எதிரானது என்று தெரிவித்துள்ளார். விசாரணை முடிவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவம் உறுதி அளித்துள்ளது.

லெபனானில் தாங்கள் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகளை அழிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை என்றும், பொதுமக்கள் அல்லது மத வழிபாட்டுத் தலங்களுக்குத் தீங்கு விளைவிப்பது இஸ்ரேலிய ராணுவத்தின் கொள்கை அல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட அந்தச் சிலையினைச் சீரமைக்க உள்ளூர் மக்களுடன் இணைந்து ராணுவம் ஒத்துழைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டெப்ல் (Debl) கிராமத்தின் நகராட்சித் துணைத் தலைவர் மரூன் நாசிஃப் (Maroun Nassif), இந்தச் செயலை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "இது எங்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் மட்டுமல்ல, எங்கள் புனித நம்பிக்கைகள் மீதான தாக்குதலாகும். இந்த வெட்கக்கேடான செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் நடந்துள்ள இந்தச் சம்பவம், பிராந்தியத்தில் மத ரீதியான மற்றும் சமூக ரீதியான பெரும் மனக்கசப்பை உருவாக்கியுள்ளது.

IDF investigate about Israeli soldier breaks Jesus statue
பேச்சுவார்த்தைக்கு ஆள் அனுப்பிவிட்டு.. அமெரிக்கா செய்த மோசம்! ஈரானுக்கு ஏமாற்றம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com