இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னை: ஜவஹர்லால் நேரு முதல் மோடி வரை இந்தியப் பிரதமர்கள் எடுத்த நிலைபாடுகள்!

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரை இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையில் என்ன நிலைப்பாட்டை கடைபிடித்தார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவின் நிலைப்பாடு
இந்தியாவின் நிலைப்பாடுபுதிய தலைமுறை

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் நடந்த யூதப் படுகொலையில் இருந்து தப்பி 1920 முதல் 1940ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஒட்டோமான் பேரரசில் யூதர்கள் குடியேறினர். இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர்.

இதையடுத்து 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் என்றொரு நாடு உருவானதாக யூதத் தலைவர்கள் அறிவித்தனர். இந்நிலையில் 1962 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இந்திய அரசியல் தலைவர்கள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துடன் பேணி வந்த உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்திய பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்த போது இந்தியா - சீனா இடையேயான மோதலில் இஸ்ரேல் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டது. ஆனால் இந்தியாவின் பார்வை இரு நாடுகளுக்கும் பொதுவானதாகவே இருந்து வந்தது.

ஜவஹர்லால் நேரு
ஜவஹர்லால் நேரு முகநூல்

அதைத் தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு இந்திய பிரதிநிதி அலுவலகம் காஸாவில் திறக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு யாசர் அரபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை அமைப்பை அங்கீகரித்த ஒரே அரபு அல்லாத நாடாக இந்தியா இருந்தது.

அப்போதைய பிரதமரான இந்திரா காந்திக்கும் யாசர் அரபாத்தும் இடையே நட்பு ரீதியான நல்ல உறவு இருந்ததாக தகவல்கள் கிடைக்கின்றன. அதைத் தொடர்ந்து 1988 -இல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ராஜீவ் காந்தி அரசு, பாலஸ்தீனத்தை அங்கீகரித்து.

2000-ம் ஆவது ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமராக இருந்த வாஜ்பாய் தலைமையிலான அரசில் மத்திய அமைச்சர்கள் இஸ்ரேலுக்குச் சென்று இருநாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்தினர். அதைத் தொடர்ந்து 2003-இல் வாஜ்பாய் ஆட்சியில் இருந்த போது இந்தியா வருகை தந்த முதல் இஸ்ரேலியப் பிரதமர் என்ற அந்தஸ்தைப் பெற்றார் ஏரியல் ஷெரோன்.

2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இஸ்ரேல் உடனான உறவு மேலும் தழைக்க ஆரம்பித்தது.

இந்தியாவின் நிலைப்பாடு
அன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது... இன்று காஸாவில் நிகழ்கிறது..!

அதன்பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 2014- ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் இருதரப்பு தலைவர்களின் பரஸ்பர வருகை அதிகரித்தது.

பிரதமராக நரேந்திர மோடி
பிரதமராக நரேந்திர மோடி முகநூல்

2017-இல் மோடி இஸ்ரேல் பயணம் சென்றதன் மூலமாக இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் போது இருநாடுகளுக்கு இடையே ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் அளவுக்கு உறவு வலுப்பெற்றிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com