அமெரிக்கா
அமெரிக்காpt web

அமெரிக்கா எப்படி உலகைக் கட்டுப்படுத்துகிறது? அதன் ராஜதந்திர செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?

அமெரிக்க அதிபர் பதவியேற்பு போல் வேறு எந்த நிகழ்வும் உலகின் கவனத்தை ஈர்த்தது இல்லை. ஏன் அமெரிக்க அதிபர் பதவி முக்கியமானது... அவரது ஒரு சொல் உலகை எப்படி மறைமுகமாக கட்டுப்படுத்தும்..
Published on

செய்தியாளர் விக்ரம் ரவிசங்கர்

அமெரிக்காவின் பொருளாதார வலிமை

உலகில் எத்தனையோ நாடுகள் உள்ளன... எத்தனையோ தலைவர்கள் அதிபராக, பிரதமராக பதவியேற்கின்றனர். ஆனால், அமெரிக்க அதிபர் பதவியேற்பு போல் வேறு எந்த நிகழ்வும் உலகின் கவனத்தை ஈர்த்தது இல்லை. ஏன் அமெரிக்க அதிபர் பதவி முக்கியமானது? அவரது ஒரு சொல் உலகை எப்படி மறைமுகமாக கட்டுப்படுத்தும்?

அமெரிக்கா என்றாலே பலருக்கும் மனதில் தோன்றுவது கனவு தேசம்... உலக வல்லரசு... என்பதாகத்தான் இருக்கும். பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் என 3 முக்கிய தளங்களில் அமெரிக்காவின் ஆதிக்க கரங்கள் பிரமிக்க வைப்பதாக உள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார வலிமையை விளக்க வேறு எந்த உதாரணமும் வேண்டாம். உங்கள் வீட்டிற்குள் உள்ள பொருட்களே போதும். கோல்கேட், கோககோலா, அமேசான், மெக்டொனால்டு, ஆப்பிள், கூகுள், இன்ஸ்டாகிராம் என வீடுகளிலும், கைகளிலும் குடிகொண்டுள்ள அமெரிக்க பிராண்டுகள் ஏராளம். இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளிலும் இதே நிலைதான். உலகின் முன்னணி 100 பிராண்டுகளில் 51 பிராண்டுகள் அமெரிக்காவைச் சேர்ந்தவை.

அமெரிக்கா
19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்

அமெரிக்காவின் ராணுவ வலிமை

உலக மக்கள் தொகையில் அமெரிக்காவின் பங்கு 5% மட்டுமே. ஆனால் உலக பொருளாதார மதிப்பில் சுமார் 26% அமெரிக்காவின் பிடியில் உள்ளது.

உலக சந்தையை தன் வசப்படுத்தியுள்ள அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதார வலிமையின் மதிப்பு 30.34 ட்ரில்லியன் டாலர்கள். உலக மக்கள் தொகையில் அமெரிக்காவின் பங்கு 5% மட்டுமே. ஆனால் உலக பொருளாதார மதிப்பில் சுமார் 26% அமெரிக்காவின் பிடியில் உள்ளது. எத்தனைதான் பணம் இருந்தாலும் நிம்மதியாக வாழ ராணுவ வலிமையும் முக்கியம். அதிலும் அமெரிக்கா கில்லிதான். உலக நாடுகள் மேற்கொள்ளும் ஒட்டுமொத்த ராணுவ செலவுகளில் அமெரிக்காவின் பங்கு 37% என்பதே அதன் வலிமையை பறைசாற்றும் எண். பாதுகாப்பிற்காக அமெரிக்கா செலவிடுவது 831 பில்லியன் டாலர்கள். இதில் 227 பில்லியன் டாலர்களுடன் சீனா 2ஆம் இடத்திலும் 109 பில்லியன் டாலர்களுடன் ரஷ்யா 3ஆம் இடத்திலும் 74 பில்லியன் டாலர்களுடன் இந்தியா 4ஆம் இடத்திலும் உள்ளன. ஆகாயத்தில் பறக்கும் போர் விமானங்களிலிருந்து நீரில் அரசாட்சி செய்யும் போர்க்கப்பல்கள் வரை அமெரிக்க தயாரிப்புகள்தான் உலக சந்தையை ஆக்கிரமித்துள்ளன.

பிற நாடுகள் தரைப்படை, விமானப்படை, கப்பல் படை வைத்துள்ள நிலையில் அமெரிக்கா விண்வெளி படையையே வைத்துள்ளது. அமெரிக்காவின் படைகள் அந்நாட்டிற்குள் மட்டுமல்ல... உலகெங்கும் 80 நாடுகளில் 750 இடங்களில் நிலைகொண்டுள்ளன. இதனால் பூமிப்பந்தில் எந்த ஒரு இடத்திலும் நினைத்த நிமிடத்தில் தாக்குதலை தொடங்கும் திறன் அமெரிக்காவுக்கு உள்ளது.

அமெரிக்கா
”மோடி அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எச்சரித்த ட்ரம்ப்.. கைகுலுக்கிய ஹமாஸ் - இஸ்ரேல்

பொருளாதாரத்திலும் படைபலத்திலும் கோலோச்சும் அமெரிக்கா அரசியலில் மட்டும் பின் தங்கிவிடுமா என்ன? பல நாடுகள் அமெரிக்காவின் விரலசைவில் இயங்குகின்றன. மத்திய கிழக்கை நரகமாக்கிவிடுவேன் என ட்ரம்ப் எச்சரித்த மறுவாரமே பரம எதிரிகளான இஸ்ரேலும் ஹமாசும் கைகுலுக்கிக்கொள்ளும் அளவுக்கு அமெரிக்காவின் வீச்சு உள்ளது. உலகின் பல நாடுகளில் ஆட்சிகள் அமைவதிலும் கவிழ்வதிலும் அமெரிக்காவின் கரங்கள் இருக்கும் என்பது பரவலாக பேசப்படும் கருத்து.

17ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று உக்ரைன் நடத்தும் போர் வரை உலகின் பல போர்களிலும் அமெரிக்காவின் பங்களிப்பு உண்டு. முதல் 2 உலகப்போர்கள், ஜப்பானில் அணுகுண்டு வீசியது என பல கருப்பு பக்கங்களையும் உள்ளடக்கியதுதான் அமெரிக்க வரலாறு. அதே நேரம் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் தென் அமெரிக்காவிலும் பல ஏழை நாடுகளுக்கு உணவுப் பொருட்கள் மருத்துவ உதவிகள் அளித்து உதவி அவர்களை தங்கள் பிடிக்குள் வைத்துக்கொள்வதும் அமெரிக்க ராஜதந்திரத்தின் இன்னொரு பக்கம். இப்படி உலகை 3 தளங்களில் இருந்தும் தன் இரும்புப்பிடியில் வைத்திருக்கும் அமெரிக்காவின் அதிபர் பதவியின் முக்கியத்துவம் இப்போது உங்களுக்கே விளங்கியிருக்கும் அல்லவா?

அமெரிக்கா
“அறிவியல் பேசினால் திராவிடம்.. மூடநம்பிக்கை பேசினால் ஆரியம்” திமுக எம்பி ஆ.ராசா பேச்சு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com