ஆ. ராசா
ஆ. ராசாpt web

“அறிவியல் பேசினால் திராவிடம்.. மூடநம்பிக்கை பேசினால் ஆரியம்” திமுக எம்பி ஆ.ராசா பேச்சு

“திராவிடவியல் கருத்தியலாக உள்ளது ஆரியத்திற்க்கு அவை எதிராக உள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா
Published on

சென்னையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாட்டை நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்

இந்த மாநாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல், திராவிடவியல், இந்திய மக்களாகிய நாம் என்ற தலைப்பில் கருத்தரங்குகள் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ரகுபதி, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் மற்றும் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக சட்ட பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆ. ராசா
”நீதியைத்தான் நாங்கள் விரும்புகிறோம்; மற்றவர்கள் எங்கே?” - கொல்கத்தா பெண் மருத்துவரின் தாய் பேட்டி!

திமுக சட்டத்துறை மாநாட்டில் திராவிடவியல் கருத்தரங்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது, “திராவிடவியல் தத்துவம் பேசு பொருளாக உள்ளது. அக்னி, யாகம், நம் பண்பாட்டில் இல்லை. திராவிடம் தனி அடையாளத்துடன் இருந்தது. திராவிடம் இல்லை என்று சொல்கிறவர்கள் ஆரியம் இல்லை என்று சொல்கிறார்களா என்று கேட்டால் இல்லை ஆரியத்தை மட்டும் ஏற்கிறார்கள். அறிவியல் பேசினால் திராவிடம், மூடநம்பிக்கை பேசினால் ஆரியம். திராவிடம் என்பது சமூக நீதிக்கானது மட்டும் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திராவிடவியல் கருத்தியலாக உள்ளது ஆரியத்திற்க்கு அவை எதிராக உள்ளது

முதலாளியாக பிறந்து தாழ்த்தப்பட்டவர்களுக்காக பாடுப்பட்டவர் பெரியார். ஆணாக பிறந்து பெண்களுக்காக பாடுப்பட்டவர் பெரியார். நாடு, மொழி, கலச்சாரம் அனைத்திலும் திராவிடவியல் உள்ளது. பெரியாரையும் - அம்பேத்கரையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்த வேண்டும். அம்பேத்கர் -பெரியார் ஆகியோர் சாதி தீண்டாமைக்கு எதிராகவும், பெண்கள் உரிமைக்காகவும் பேசியவர்கள். இருவரையும் ஒன்றாக தான் பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.

ஆ. ராசா
குளிர்காலம் | இந்தியாவில் சராசரி வெப்பநிலை உயர்வு.. ஆய்வில் தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com