தொலைந்துபோன 6.7 கோடி மதிப்பிலான வைர மோதிரம்; பழியை சுமந்த ஹோட்டல் ஊழியர்கள்! க்ளைமேக்ஸில் ட்விஸ்ட்!

பாரிஸில் 6.7 கோடி மதிப்பிலான வைர மோதிரம் காணாமல் போனதாக மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அதனை தூய்மை பணியாளர் ஒருவர் கண்டெடுத்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 6.7 கோடி மதிப்பிலான வைர மோதிரம்
6.7 கோடி மதிப்பிலான வைர மோதிரம்முகநூல்

பாரிஸில் 6.7 கோடி மதிப்பிலான வைர மோதிரம் காணாமல் போனதாக மலேசியாவை சேர்ந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அதனை தூய்மை பணியாளர் ஒருவர் கண்டெடுத்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோப்பு காட்சி

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகரமான பாரிஸுக்கு மலேசியாவை சேர்ந்த தொழிலதிபரான பெண் ஒருவர் அங்கு உள்ள ரிட்ஸ் என்னும் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று தனது 6.7 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தினை காணவில்லை என்று தெரிவித்த அவர், அதனை தான் தங்கியிருந்த ஓட்டலின் அறையில் தொலைத்துவிட்டதாக சந்தேகித்தார். மேலும் காணாமல் போன மோதிரத்தினை அந்த ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்கள்தான் எடுத்திருக்க வேண்டும் என்று சந்தேகித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், இவர் கூறியதை ஹோட்டல் நிர்வாகம் மறுத்தது. இதற்கு இழப்பீடாக மூன்று இரவுகள் அந்த நட்சத்திர ஹோட்டலில் தங்க அப்பெண்ணுக்கு அனுமதி அளித்தது ஹோட்டல் நிர்வாகம்.

காணாமல் போன அந்த மோதிரத்தில் 6.51 காரட் வைரம் மற்றும் இரண்டு பிளாட்டினம் பதிக்கப்பட்டிருந்தது என்பது கூடுதலான தகவல்.

இந்நிலையில், 2 நாட்களுக்கு பின் அந்த மோதிரமானது தூய்மை பணியாளர் ஒருவர் தூய்மை பணியில் ஈடுபட்டபோது பயன்படுத்திய வாக்கியூம் கிளீனரில் சிக்கியுள்ளது. தன்னிடம் சிக்கிய மோதிரத்தினை அப்பணியாளர் ஓட்டல் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

 6.7 கோடி மதிப்பிலான வைர மோதிரம்
மளிகைக்கடைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 70வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் கைது

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக அந்த ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ” இம்மோதிரத்தினை தேடுவதற்காக முழு பங்களிப்பினை வழங்கிய ரிட்ஸ் ஊழியர்களுக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் நேர்மையை முன்னிறுத்தியே எங்களது பணி இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளனர்.

திருடியதாக யார் மீது புகார் அளிக்கப்பட்டதோ அப்பழியினை பெற்ற ஊழியரே காணாமல் போன மோதிரத்தினை கண்டுபிடித்து கொடுத்திருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com