முதன்முறை.. 2027 கிராமி விருது பட்டியலில் இடம்பெற்ற தமிழ்ப் பாடல்!
செய்தியாளர் - M.மீரா
69-வது கிராமி விருதுகளுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் நவம்பர் 16-ஆம் தேதி வெளியானது. இதில், தேவன் ஏகாம்பரம் மற்றும் சுஷா (சுபிக்ஷா ரங்கராஜன்) இணைந்து பாடிய 'வருவாய்' என்ற தமிழ்ப் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 'சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி' (Best Global Music Performance) பிரிவில் இடம்பெற்றுள்ள இப்பாடல், கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. ஷகிரா, ஃபாரெல் வில்லியம்ஸ் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் பாடல்களுடன் 'வருவாய்' போட்டியிடுகிறது.
இதற்கிடையே, ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படத்தின் 8 பாடல்கள் பல்வேறு பிரிவுகளில் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டும் ஒரு பாடல்கூட பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு அதிகபட்சமாக பிரிட்டிஷ் பாடகி ரேய் 11 பிரிவுகளிலும், ரோசாலியா 9 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
69-வது கிராமி விருது வழங்கும் விழா பிப்ரவரி 7-ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.

