\
Amazon MGM Studios Announces New James Bond: The New 007 Revealed
கோப்புபடம்Reuters

"BOND.. JAMES BOND.." இவர் தான் புது 007! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட Amazon MGM Studios!

2021-ல் வெளியான 'No Time to Die' படத்துடன் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் இருந்து டேனியல் கிரெய்க் விலகினார். இதையடுத்து அடுத்த பாண்டாக யார் நடிப்பார் என்ற விவாதம் தொடர்ந்து வந்தது.
Published on: 

உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்பை கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். இயன் பிளெம்மிங் எழுதிய ஸ்பை நாவல்களை மையமாகக் கொண்டு உருவாகும் ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் Dr. No முதல்  No Time to Die வரை 25 படங்கள் வெளியாகி இருக்கிறது. Sean Connery, George Lazenby, Roger Moore, Timothy Dalton, Pierce Brosnan, Daniel Craig என ஆறு நடிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்துள்ளனர்.

Daniel Craig
Daniel Craig Reuters

இந்நிலையில் 2021-ல் வெளியான 'No Time to Die' படத்துடன் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் இருந்து டேனியல் கிரெய்க் விலகினார். இதையடுத்து அடுத்த பாண்டாக யார் நடிப்பார் என்ற விவாதம் தொடர்ந்து வந்தது. பல்வேறு ஹாலிவுட் நடிகர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து Amazon MGM Studios.

Amazon MGM Studios Announces New James Bond: The New 007 Revealed
உணர்வுப்பூர்வமான கதையில் தடுமாறும் திரைக்கதை.. | Flag Review | Master Deehan | Mickey Makhija

ராபர்ட் பாட்டின்சன் தான் 007 கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2005-ல் வெளியான 'Harry Potter and the Goblet of Fire' படத்தின் மூலம் கவனம் பெற்ற ராபர்ட் பாட்டின்சன், 'Twilight' திரைப்படத் தொடரின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து 'Tenet', 'The Lighthouse', 'Good Time' உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். 2022-ல் வெளியான 'The Batman' படத்தில் பேட்மேனாக நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். தற்போது ஜேம்ஸ் பாண்டாகவும் அவர் களமிறங்க இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராபர்ட் பாட்டின்சன்
ராபர்ட் பாட்டின்சன்Reuters

இந்தப் புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தை 'Dune', 'Arrival' போன்ற படங்களை இயக்கிய டெனிஸ் வில்லெனுவே (Denis Villeneuve) இயக்குகிறார். 'Peaky Blinders' தொடரை உருவாக்கிய ஸ்டீவன் நைட் (Steven Knight) இப்படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார். இந்தப் புதிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு 2027-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2028-ல் படம் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டேனியல் கிரெய்க்கிற்குப் பிறகு 007 கதாபாத்திரத்தில் நடிக்கும் ஏழாவது நடிகர் என்ற பெருமையை ராபர்ட் பாட்டின்சன் பெற்றுள்ளார். ஏற்கெனவே பேட்மேனாக நடித்த அவர், தற்போது ஜேம்ஸ் பாண்டாகவும் மாறவிருப்பது ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்போது ஜேம்ஸ் பாண்ட் சார்ந்த அடுத்த கேள்வியாக இந்தப் படத்தில் Bond Girl யார் என்ற அடுத்த கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Amazon MGM Studios Announces New James Bond: The New 007 Revealed
நன்றி குறிப்பில் ‘தனுஷ்’ பெயர் இல்லை.. ரசிகர்கள் வேதனை! DNA கூட்டணிக்கு என்னாச்சு?