\
Sheikh Hasina & Muhammad Yunus
Sheikh Hasina & Muhammad YunusReuters

ஷேக் ஹசீனா வருகை? வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை.. அங்கங்கே குண்டுவெடிப்பால் கலவரம்!

அவாமி லீக் கட்சியின் போராட்டம்: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த அரசியல் குழப்பம்
Published on: 
Summary

2024-இல் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டம், மக்கள் எழுச்சியாக மாறி, அரசியல் பதற்றத்தை அதிகரித்தது. இடைக்கால அரசு அமைக்கப்பட்டதுடன், அவாமி லீக் கட்சியினருக்கும் புதிய அரசுக்கும் மோதல் தீவிரமடைந்தது. தற்போது, வன்முறைச் சம்பவங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

செய்தியாளர் - M.மீரா

2024-இல் வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியில் இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் பின்னர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக மாறியது. போராட்டம் தீவிரமடைந்ததால், 2024 ஆகஸ்ட் மாதம் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

ஹசீனா வெளியேறிய பிறகு நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு அவாமி லீக் கட்சியின் செயல்பாடுகளுக்குத் தடை விதித்தது. மேலும், ஹசீனா ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் அவாமி லீக் கட்சியினருக்கும் புதிய அரசுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.

Bangladesh violence
Bangladesh violenceReuters

தற்போது இந்தியாவில் வசித்து வரும் ஷேக் ஹசீனா, 2026 டிசம்பரில் எப்படியாவது வங்கதேசம் திரும்புவேன் என்று அறிவித்துள்ளார். இதற்காக புதிய பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்ததாகவும், வங்கதேச அரசு அதனை நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பின் ஓராண்டு நிறைவையொட்டி அவாமி லீக் கட்சி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. அவரை நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது

அரசியல் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸின் பூர்வீக வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். மேலும், அவரது கிராமீன் வங்கியின் பல கிளைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bangladesh Violence
Bangladesh Violencereuters

மேலும் தடை செய்யப்பட்டுள்ள அவாமி லீக் கட்சி, நாடு தழுவிய முடக்கப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாலையில் பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள், வாகனங்களுக்குத் தீ வைப்பு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

டாக்கா காவல்துறையினர் முன்னாள் கல்வி அமைச்சர் நூருல் இஸ்லாம் நஹித் உட்பட 24 மணி நேரத்தில் 565 பேரைக் கைது செய்துள்ளனர்.

Sheikh Hasina & Muhammad Yunus
சீனா வெளியிட்ட வீடியோ! வாயடைத்து போகும் உலக நாடுகள்!