\
robot dance
robot dancereuters

சீனா வெளியிட்ட வீடியோ! வாயடைத்து போகும் உலக நாடுகள்!

சீனா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன வீடியோவை சீனா வெளியிட்டது? உலக நாடுகள் வியந்து பார்ப்பதற்கான காரணம் என்ன? விரிவாகப் பார்க்கலாம்...
Published on: 
Summary

சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், 151 மனித உருவ ரோபோக்கள் ஒரே நேரத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ள வீடியோ சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது. ரோபோக்களின் துல்லியமான ஒருங்கிணைப்பு மற்றும் தற்காப்புக் கலைகளில் ஈடுபடுதல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார். ர

சீனா வல்லரசு நாடாக உயர்ந்து வருவது மட்டுமின்றி, தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அமெரிக்காவுக்குப் போட்டியாக உருவெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் சீனா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

robot
robotreuters

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ரோபோக்கள் ஒருங்கிணைந்து, மனிதர்களைப் போலவே நடனமாடும் அந்த வீடியோ பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் 151 மனித உருவ ரோபோக்கள் ஒரே நேரத்தில் நடனமாடி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளன. இதுதொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

robot dance
ஈரானிடம் அணுகுண்டை விட மோசமான ஆயுதங்கள்.. கொல்லப்பட்ட விஞ்ஞானியின் மகன் பரபரப்பு தகவல்!

சீனாவின் தொழில்நுட்ப நகரமாகக் கருதப்படும் ஷென்சென் நகரில்தான் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெறும் 33-வது ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (APEC) தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு, அந்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே இந்த ரோபோக்களின் அணிவகுப்பும் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த மற்றொரு விஷயம், ரோபோக்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்ட விதம்தான். வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ரோபோக்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் கைகளை உயர்த்துவது, உடலை வளைப்பது, முன்னோக்கிச் சாய்வது என நடன அசைவுகளைத் துல்லியமாகச் செய்துள்ளன. இதுமட்டுமின்றி, ஷென்சென் நகரில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியிலும் சில ரோபோக்கள் தற்காப்புக் கலைகளில் ஈடுபடுவது, கூண்டுக்குள் சண்டையிடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதேபோல், பார்வையாளர்களுக்கு ஐஸ்கிரீம் வழங்குவது, காபி மற்றும் பானங்களைத் தயாரித்துக் கொடுப்பது போன்ற சேவைப் பணிகளிலும் ரோபோக்கள் ஈடுபட்டுள்ளன.

china
chinareuters

மனிதர்கள் செய்யும் பல்வேறு வேலைகளை ரோபோக்கள் செய்வது ஒருபுறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், தற்போது ரோபோக்களுக்குத் தற்காப்புக் கலைப் பயிற்சிகளும் வழங்கப்படுவதுதான் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்குக் காரணம், எதிர்காலத்தில் சீனாவுடன் போர் மூளும் சூழல் ஏற்பட்டால், போர்க்களங்களில் மனித வீரர்களுக்கு மாற்றாக ரோபோக்களைச் சீனா பயன்படுத்தக்கூடுமா என்ற கேள்விதான். குறிப்பாக, ராணுவப் பயன்பாட்டிற்கான ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் உலக நாடுகளிடையே முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், மனித உருவ ரோபோக்களின் இத்தகைய வளர்ச்சி எதிர்காலப் போர்களின் தன்மையையே மாற்றக்கூடும் என்ற விவாதங்களும் அச்சமும் எழுந்துள்ளது.

robot dance
ட்ரம்பைக் கொல்லத் திட்டம்! சிக்கிய பாகிஸ்தான் நபர்! பின்னணியில் இவர்களா?