hamas - israel war
hamas - israel warfile image

இந்தியர்களுக்கு எதிராக நிற்கும் இந்தியா? இந்தியாவை முன்னிருத்தும் ஹமாஸ்.. பின்னணி என்ன?

"ஒருகாலத்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இருந்த இந்தியா, இப்போது அந்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. பல அரசு நாடுகளின் அபிமானியாக இருக்கக்கூடிய இந்தியாவின் இந்த நிலைப்பாடு, இந்தியர்களின் நலனை பாதிக்கும்"

இஸ்ரேல் - ஹமாஸ் போர் விவகாரத்தில் இந்தியர்களின் நலனுக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியாவே இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் ஹமாஸ் அமைப்பின் வெளியுறவு விவகார அலுவலர் மூஸா அபு மார்சுக். இந்தியா எப்படி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரத்தை பெற்றதோ, அதேபோல் இஸ்ரேலிடம் இருந்து நாங்களும் விடுதலை பெறுவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் அவர் பேசியுள்ளார்.

கடந்த 7ம் தேதி அன்று தொடங்கிய இந்த போர் குறித்து பேசியுள்ள மூஸா அபு மார்சுக், “இது ஒன்றும் திடீர் போர் அல்ல. பல ஆண்டுகளாக பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் கொன்றதன் எதிரொலிதான் இது. முழுக்க முழுக்க ஆக்கிரமிப்பு, தொடர் தாக்குதலை எதிர்த்தே ஹமாஸ் அமைப்பு போராடி வருகிறது. இந்தியா எப்படி ஒரு பிரிட்டன் ஆட்சிக்கு கீழ் தொடர விரும்பவில்லையோ, அதேபோல்தான் நாங்களும் சுதந்திரம் பெற விரும்புகிறோம்.

இந்தியாவை தனது கட்டுக்குள் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசு, அப்போது அவர்கள்தான் கிங் ஆக விளங்கினர். ஆனாலும், பிரிட்டிஷ் அரசை எதிர்த்து இந்தியர்கள் போராடினர். நாங்கள் எங்களது நலனுக்காக கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

hamas - israel war
16 நாளில் ரூ.525 கோடி..12 நாளில் ரூ.540 கோடி..ஜெயிலரை முந்துவதில் லியோவுக்கு என்ன சிக்கல்? ஓர் அலசல்

ஆஸ்லோ ஒப்பந்தத்திற்கு பிறகு எங்களுக்கு கொடுப்பதாக கூறிய நிலங்களை இதுவரை கொடுக்கமுடியவில்லை. மற்ற நாடுகளுக்கு கூட இங்கிருந்து எளிதாக சென்று வர முடிகிறது. ஆனால், பாலஸ்தீன பகுதிகளான வெஸ்ட் பேங்க் - காஸாவுக்கு இடையே இப்பகுதி மக்களால் சென்றுவர முடியவில்லை. அப்போது சூப்பர் பவரை கொண்டிருந்த பிரிட்டிஷைவிட இப்போது இஸ்ரேல் ஒன்றும் பெரிய ஆளாக இல்லை. தொடர்ந்து போராடுவோம். ஈரானுக்கு முன்பாகவே இஸ்ரேல் மீதான எங்களது எதிர்ப்பு தொடங்கிவிட்டது. இப்போது ஈரான் அரசும் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஆனால், ஒருகாலத்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இருந்த இந்தியா, இப்போது அந்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. பல அரசு நாடுகளின் அபிமானியாக இருக்கக்கூடிய இந்தியாவின் இந்த நிலைப்பாடு, இந்தியர்களின் நலனை பாதிக்கும். இஸ்ரேலின் தாக்குதலுக்கு அடிபணிவது எளிதான ஒன்றுதான் என்றாலும், அப்படி செய்தாலும் அவர்கள் எங்களை விடப்போவதில்லை. மகாத்மா காந்தி சொன்னதுபோல, சரியான வழி எப்போதுமே கடினமானதாகத்தான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், கோர தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்தாலும், ஹமாஸ் அமைப்பினர் தொடர் தாக்குதலையே முன்னெடுக்கின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.

hamas - israel war
சொகுசு பைக்கை தீக்குச்சியை வைத்து நூதன முறையில் திருடிச் சென்ற நபர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com