இன்னும் பல மாதங்களுக்கு எங்களால் சண்டையிட முடியும்: ஹமாஸ் தலைவர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை..!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசியதற்காகவே பல்வேறு பாலஸ்தீனியர்களை அமெரிக்க அரசு சிறைப்பிடித்து வைத்திருக்கிறது.
GAza
GAzaAP

இஸ்ரேல் பாலஸ்தீன் இடையேயான யுத்தம் மீண்டும் உலக அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. ஹமாஸ் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தயதையடுத்து , இஸ்ரேல் அரசு பதில் தாக்குதல் நடத்திவருகிறது. பாலஸ்தீன மக்கள் அதிகளவில் வாழும் காஸாவில் அது உச்சம் அடைந்திருக்கிறது.

Adel Hana

ஹமாஸின் மூத்த அதிகாரியான அலி பராக்கே இந்தத் தாக்குதல் குறித்து மீடியாக்களுக்கு பேட்டியளித்திருக்கிறார். நாங்கள் திட்டமிட்டிருந்தது (இஸ்ரேல் மீதான தாக்குதல்) பெரிதாக யாருக்கும் தெரியாது. இஸ்ரேல் அரசு விடுமுறைக் கொண்டாட்டங்களில் இருக்கும் சமயம் தான் தாக்க வேண்டும், அதுவே சரியான தருணம் என நாங்கள் திட்டமிட்டிருந்தோம்.

அமெரிக்காவில் பாலஸ்தீனியர்களை சிறைப்பிடித்திருக்கிறார்கள். அவர்களின் விடுதலையை கோரிக்கையாக வைப்போம். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசியதற்காகவே பல்வேறு பாலஸ்தீனியர்களை அமெரிக்க அரசு சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. காஸாவில் இருக்கக்கூடிய ஆதரவற்றோர்களுக்காக கருணை இல்லங்கள் நடத்தியதற்காக அமெரிக்காவிலிருக்கும் பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேல் அரசின் வேண்டுகோளின்படி தான் இவர்களை எல்லாம் கைது செய்தது அமெரிக்க அரசு. அப்படி கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் ஆயுள் முழுக்க சிறையில் தான் இருக்க வேண்டும். அவர்களின் விடுதலைக்காக போராடுவதே எங்களின் குறிக்கோள். பாலஸ்தீனிய மக்கள் எங்களுடன் துணை நிற்பார்கள். இன்னும் பல மாதங்களுக்கான ஆயுதக் கையிருப்பு எங்களிடம் இருக்கிறது.

2014ம் ஆண்டு நடந்த போரில் நாங்கள் 51 நாள்கள் தாக்குப்பிடித்தோம். இந்த முறை பல மாதங்களுக்கு எங்களால் தாக்குப்பிடிப்பதற்கான திறன் இருக்கிறது. காஸாவை இப்படி ஒன்றுமில்லாமல் மொத்தமாக அழிப்பதை எல்லோரும் சகித்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? . இஸ்ரேல் அதிபர் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்..?. இந்த நிலை தொடர்ந்தால் எங்களின் கூட்டாளிகள் எங்களுடன் இந்த போரில் இணைவார்கள்.

காஸாவைத் தீக்கிரையாக்கினால், இந்த உலகம் நரகமாகிவிடும் என்பதை அறிந்தே தான் இஸ்ரேல் இப்படியெல்லாம் செய்கிறது. தடைசெய்யப்பட்ட அமெரிக்க ஆயுதங்களைப் ப்யன்படுத்தி காஸாவை பூண்டோடு அழித்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

GAza
ஹமாஸ் விடுத்த எச்சரிக்கை.. இஸ்ரேல் இதை செய்தால் நிலைமை மோசமாகும்.. கவலை தெரிவிக்கும் ஐநா!



இவ்வாறு மூத்த ஹமாஸ் அதிகாரியான அலி பரெக்கே பேட்டி அளித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com