E. இந்து
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த வாரம் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்து காணப்பட்டது.
அதேவேளையில், சர்வதேச சந்தையிலும் சென்ற வார இறுதியில் முன்பை விட குறைவாக இருந்தது. இந்நிலையில், வாரத்தின் முதல் பங்கு வர்த்தனை நாளான இன்று (மே 19) இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
இன்று (மே 19) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,755க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரம் ரூ.70,040க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109க்கும், கிலோவிற்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.1,09,000க்கும் விற்பனையாகிறது.
அமெரிக்காவில் உயரும் தங்கத்தின் விலை:
அமெரிக்காவில் கடந்த வாரம் வெள்ளியன்று (மே 16) தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. இந்நிலையில், அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்பின் வரி அச்சுறுத்தல்களை மீண்டும் அந்நாட்டின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசெண்ட் சென்ற வாரம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, இன்று (மே 19) அமெரிக்காவில் தங்கத்தின் விலை உயர்ந்தது.
இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 0.4 சதவீதம் அதிகரித்து $3,216.29க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி ஒரு அவுன்ஸ் 0.1 சதவீதம் அதிகரித்து $32.31க்கும், பிளாட்டினம் 0.2 சதவீதம் அதிகரித்து $989.31க்கும், பல்லேடியம் 0.3 சதவீடம் அதிகரித்து $963.94க்கும் விற்பனையாகிறது.
அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசெண்ட் இதுகுறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், “அமெரிக்க அரசாங்கத்துடனான ஒப்பந்தங்களில், நம்பிக்கைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாத நிறுவனங்கள் மீது உரிய வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதிப்பார்” எனக் கூறினார்.
இதன் காரணமாக, அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான மூடிஸ் நிறுவனம் அதன் கடன் மதிப்பீட்டை கடந்த வெள்ளியன்று ஒரு சதவீதம் குறைத்தது. இதுக்குறித்து, KCM வர்த்தக தலைமை சந்தை நிறுவனத்தின் ஆய்வாளர் டிம் வாட்டார், “அமெரிக்காவின் கடன் மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் குறைத்ததும், பங்கு சந்தைகளின் தொடர்பும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் எதிர்வினையாகத்தான் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டிரம்பின் வர்த்தகப் போர்கள் உலகளவில் வர்த்தக ஓட்டங்களை கடுமையாக சீர்குலைத்துள்ளது. பங்கு சந்தைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.