ஜோ பைடன்
ஜோ பைடன்fb

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எலும்புகளுக்கு பரவியுள்ள தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

பைடனுக்கு சிறுநீரக பிரச்னைகள் இருக்கும்பட்சத்தில், நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாகவே, ஜோ பைடனின் உடல்நிலை குறித்த ஊகங்கள் அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலேயே தொடங்கின. குறிப்பாக, ஜூன் மாதம் அவர் மீண்டும் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நடந்த ஒரு மோசமான மேடை விவாதத்திற்குப் பிறகு, அவரது உடல் மற்றும் மன கூர்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இந்த விமர்சனங்களை தொடர்ந்து பைடன் இறுதியில் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் இருந்து போட்டியிடுவதற்கான முயற்சியில் இருந்து விலகினார்.

இந்தநிலையில்தான், அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஜோ பைடனின் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பைடன் சமீபத்தில் அதிகரித்த சிறுநீர் அறிகுறிகளால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் விளைவாக, புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. வெள்ளிக்கிழமை அன்று, புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த புற்றுநோய் கிளீசன் ஸ்கோர் 9 (கிரேடு குழு 5) என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இது நோயின் தீவிரமான வடிவத்தைக் குறிக்கிறது. மேலும் இது எலும்பிற்கும் பரவியுள்ளது. பைடனும், அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து டாக்டர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடன்
அர்ஜென்டினா| இடைவிடாது பெய்த கனமழை... குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

இதுகுறித்து தெரிவித்துள்ள, அமெரிக்க அதிபர் டிரம்ப், ''ஜோ பைடனின் சமீபத்திய மருத்துவ நோயறிதலைப் பற்றி அறிந்து நான் வருத்தம் அடைந்தேன். அவர் விரைவாகவும், வெற்றிகரமாகவும் குணமடைய வாழ்த்துகிறேன் '' என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com