பிரான்ஸ்: திராட்சை தோட்டங்களை உறைபனியில் இருந்து பாதுகாக்க புது உத்தி

பிரான்ஸ்: திராட்சை தோட்டங்களை உறைபனியில் இருந்து பாதுகாக்க புது உத்தி
பிரான்ஸ்: திராட்சை தோட்டங்களை உறைபனியில் இருந்து பாதுகாக்க புது உத்தி

பிரான்ஸ் நாட்டில் உள்ள சாப்லிஸ் பகுதியில் கடும் உறைபனி நிலவுவதால் அங்குள்ள திராட்சைக் கொடிகளை பாதுகாக்க, மெழுகுவர்த்தி மற்றும் வைக்கோலைக் கொண்டு தீ மூட்டி ஒயின் உற்பத்தியாளர்கள் புதிய உத்தியை பின்பற்றி வருகின்றனர்.

சாப்லிஸ் பகுதியில் தயாரிக்கப்படும் ஒயினின் சுவை உலகளவில் பிரபலமானது. ஒயின் தயாரிப்பதற்காக 14 ஹெக்டேர் பரப்பரளவில் திராட்சை கொடிகள் நடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு மைனஸ் 5 டிகிரிக்கும் கீழ் உறைபனி நிலவுவதால், திராட்சை கொடிகள் தற்போது கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுப்பதற்காக, திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவே மெழுகுவர்த்தி மற்றும் வைக்கோலைக் கொண்டு தீ மூட்டி உறைபனியை கட்டுப்படுத்தும் பணியில் ஒயின் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திராட்சை கொடிகள் பாதிக்கப்பட்டால், பிரான்சில் ஒயினுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஒயின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் திராட்சை கொடிகள் பாதிக்கப்பட்டதால், வராலாற்றிலேயே முதல் முறையாக பிரான்ஸில் மிகக் குறைந்த அளவில் ஒயின் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com