ஊழல் வழக்கு... இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவர் மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. இவ்வழக்கில் இம்ரானின் மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் பிரதமராக இருந்த போது சொத்து குறித்த வழக்கு ஒன்றில் 5 ஆயிரம் கோடி ரூபாய் பாகிஸ்தான் பணம் அந்நாட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இப்பணத்தை இம்ரான் கான், அவரது மனைவி உட்பட மொத்தம் 6 பேர் தங்களுக்கு வேண்டிய ஒரு நபருக்கு அளித்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அல் காதிர் ட்ரஸ்ட் என்ற அந்த வழக்கில் ஊழலுக்கு எதிரான சிறப்பு நீதிமன்றம் 3 முறை தீர்ப்பை வழங்க முயன்று தள்ளிவைக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் தண்டனை (வேறு சில வழக்குகளுக்கான தீர்ப்புகள் உட்பட) அறிவிக்கப்பட்டுள்ளது.