ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டுமுகநூல்

ஜல்லிக்கட்டு வீரர்களிடம் சாதி, மதம் விவரம் கேட்கப்பட்டதா? விளக்கமளித்த மதுரை மாவட்ட ஆட்சியர்!

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களிடம் சாதி, மதம் போன்ற எவ்வித விவரங்களும் கோரப்படுவதில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Published on

பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு காரணமாக தமக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என தமிழரசன் என்பவர் சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தமிழரசன் என்பவர் போட்டிக்கு தாமதமாக வந்ததால் 9ஆவது சுற்றில் களமாட இருந்தார் என்றும், மழை குறுக்கிட்டதால் 9ஆவது சுற்று நடத்தப்படாமல் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கான சுற்று மட்டும் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

சமூக வலைதளத்தில் தமிழரசன் குறிப்பிட்டது உண்மைக்கு புறம்பானது என்றும் விளக்கம் அளித்துள்ளார். மாடுபிடி வீரர்களின் உடற்தகுதி மற்றும் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் மட்டுமே ஆன்லைன் விண்ணப்பத்தில் கோரப்படுகிறது என குறிப்பிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் சங்கீதா, இனம், மதம் போன்ற எவ்வித விவரங்களும் கோரப்படுவதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு
விறுவிறுப்பாக நடைபெறும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்... வெளியான புகைப்படங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com