\
Nepal second flood wave
Nepal second flood wave Reuters

பாய காத்திருக்கும் 50 லட்சம் கனமீட்டர் நீர்.. இமயமலையில் அடுத்த பேரிடர்.. பிஹாருக்கு அபாய எச்சரிக்கை

நேபாளத்தில் ஏற்பட்ட முதல் வெள்ள பெருக்கை தொடர்ந்து, இரண்டாவதாக வெள்ள பெருக்கை ஏற்படுத்தும் அளவு இமயமலை பகுதியில் நீர் தேங்கியுள்ளது என்று எச்சரிக்கை.
Published on
Summary

நேபாள-திபெத் எல்லையிலுள்ள இமயமலைப் பகுதியில் பனிப்பாறை உடைப்பு, நிலச்சரிவு காரணமாக ஆற்றுப் பாதை மறைந்து, இரண்டு செயற்கை ஏரிகளில் 50 லட்சம் கனமீட்டர் நீர் தேங்கி உள்ளது. அணைக்கட்டுகள் உடைந்தால், போதே கோஷி வழியாக சுன்கோஷி, நாராயணி ஆறுகளுடன் இணைந்து, இந்திய எல்லைக்குள் கண்டக் ஆற்றாக நுழைந்து பீகாரில் பேரழிவு வெள்ள அபாயம் உருவாகும் என எச்சரிக்கை.

கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாள - திபெத் எல்லையில் சீன பகுதியில் அமைந்துள்ள இமயமலை பகுதியில் இருந்த பனிப்பாறையில் திடீரென பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. இந்த பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பாறைகள், மண் ஆகியவை ஆற்றின் பாதையை தடுத்ததால் அங்கு நீர் பெருமளவில் சேர்ந்துள்ளது.

இப்படி சேர்ந்த நீர் ஒரு கட்டத்தில் தடுப்பை உடைத்துக்கொண்டு பெரும் ஆக்ரோஷத்தோடு அங்கிருந்த போதேகோஷி (Bhote Koshi) ஆற்றில் சேர்ந்து மலை சரிவுகளை நோக்கி இறங்கியுள்ளது.

Reuters
Nepal second flood wave
மொத்த உலகமும் நினைத்தது தவறு! நேபாள விபத்துக்கு காரணம் இதுதான்! காட்டிக் கொடுத்தது இஸ்ரோ?

இதன் காரணமாக சில வினாடிகளில் 9 மீட்டர் வரை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, சுனாமி வேகத்தில் வந்த வெள்ளம் நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பேரழிவில் இதுவரை 600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், இமயமலை பகுதிகளில் இதே போன்று மற்றொரு இடத்திலும் பெருவெள்ளம் எப்போது வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சீன மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் உள்ள இமயமலை பகுதியில் நிலசரிவு காரணமாக இரண்டு பெரிய செயற்கை ஏரிகள் உருவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த இரு ஏரிகளிலும் சுமார் 50 லட்சம் கனமீட்டர் நீர் தேங்கி உள்ளது என்றும், இந்த ஏரிகளின் அணைக்கட்டுகள் உடைந்தால், மீண்டும் ஒரு கடுமையான பெருவெள்ளம் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு இமயமலை பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளது.

Nepal second flood wave
நேபாளம்| கோர வெள்ளத்தை எதிர்த்து நின்ற வீடு.. இணையத்தில் வைரல்!

இந்த வெள்ள நீரும் போதே கோஷி ஆறு வழியாகவே வெளியாகும் என்பதால் அந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவசர கால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் இருப்பவர்கள் வெளியேறவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

போதே கோஷி ஆற்றின் வழியே பாயும் இந்த பெருவெள்ளம், கீழ்நோக்கிச் சென்று சுன்கோஷி (Sunkoshi) மற்றும் நாராயணி (Narayani) ஆறுகளுடன் இணையும். இறுதியில் இந்த நீர் இந்திய எல்லைக்குள் நுழையும் போது 'கண்டக்' (Gandak) ஆற்றாக மாறிப் பீகாரைத் தாக்கும் என்பதால் பீகாருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Nepal second flood wave
நேபாள் அழிவை விட 100 மடங்கு அபாயம்.. சீனாவின் பேராசைக்கு பலியாகுமா இந்தியா? அதிர்ச்சி தகவல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com