\
flydubai omani copilot enquiries secret informations
Fly dubaiReuters

2017-இல் தொடங்கிய தீவிரவாதம்.. குத்துச்சண்டைப் பயிற்சி.. துணை விமானியின் விசாரணையில் பகீர் தகவல்!

இதற்கிடையே, விசாரணையாளர்கள் பல்வேறு விமான நிறுவனங்களில் அவரது பணி வரலாற்றையும் ஆய்வு செய்தனர். அதன்படி, ஐக்கிய அரபு அமீரக ஃபிளைதுபாய் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு முறைகளும் கேள்விக்குட்படுத்தப்பட்டன.
Published on: 

ஃபிளைதுபாய் விமானத்தில், துணை விமானி ஹம்மாம் அல்-ஹம்மானி நடந்துகொண்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அவர் படித்துக்கொண்டிருக்கும்போதே தீவிரவாத பாதையைத் தேர்ந்தெடுத்ததாகவும், அதற்காக அவர் குத்துச்சண்டை பயிற்சி பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஃபிளைதுபாய் விமானத்தில், துணை விமானி ஹம்மாம் அல்-ஹம்மானி நடந்துகொண்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் கைது செய்யப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் விசாரணை வளையத்தில் இருக்கும் நிலையில், அவரைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், துணை விமானி ஹம்மாம் அல்-ஹம்மாமி 2017-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் படித்துக்கொண்டிருந்தபோது தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை நோக்கி நகரத் தொடங்கினார் என்பதும், பயங்கரவாதக் குழுக்களையும் தற்கொலைத் தாக்குதல்களையும் புகழ்ந்துரைக்கும் தீவிரவாத வெளியீடுகள் மற்றும் இணைய உள்ளடக்கங்களால் அவர் ஈர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஸ்மித் மச்சார்
ஸ்மித் மச்சார்reuters

மேலும் அந்த விசாரணையில், பயங்கரவாதத்தைத் தூண்டும் உள்ளடக்கங்களுக்கு தன்னை அதிகமாக உட்படுத்திக்கொண்டும், ஒரு தனியார் பயிற்சியாளரிடம் குத்துச்சண்டை பயிற்சி செய்துகொண்டும், தனது சதித்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார் எனவும் தெரிய வந்துள்ளது.

flydubai omani copilot enquiries secret informations
ஜூலையிலேயே தாக்குதல் நடத்தத் திட்டம்.. மாஸ்டர் ப்ளான் போட்ட துணை விமானி.. விசாரணையில் பகீர் தகவல்!

இதற்கிடையே, அவரது பணி வரலாற்றையும் புலனாய்வாளர்கள் விசாரித்துள்ளனர். மேலும், அவர் இந்த தாக்குதலை நடத்துவதற்கு முன்பு, அந்த வழித்தடத்தையும் விமான நிலையத்தையும் நன்கு அறிந்துகொள்வதற்காக, இஸ்ரேலுக்கு இரண்டு முறை விமானப் பயணம் மேற்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், இஸ்ரேலின் பிரதான சர்வதேச நுழைவாயிலான விமான நிலையமே அவரது குறிக்கோளாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Fly dubai
Fly dubaiReuters

இதற்கிடையே, விசாரணையாளர்கள் பல்வேறு விமான நிறுவனங்களில் அவரது பணி வரலாற்றையும் ஆய்வு செய்தனர். அதன்படி, ஐக்கிய அரபு அமீரக ஃபிளைதுபாய் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு முறைகளும் கேள்விக்குட்படுத்தப்பட்டன. ஆனால் அந்த விசாரணையில், விமானி உரிமம் வைத்திருத்தல், நன்னடத்தைச் சான்றிதழ் பெற்றிருத்தல் மற்றும் தேவையான தேர்வுகளில் தேர்ச்சி பெறுதல் உள்ளிட்ட, அந்தப் பணிக்கான தொழில்முறை மற்றும் பாதுகாப்புத் தேவைகளை அவர் பூர்த்தி செய்திருந்தார் என்று புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது, “அவர் எந்தப் பயங்கரவாதச் சதித் திட்டங்களையும் நிறைவேற்றும் வகையில் அறிகுறிகளைக் கொண்டிருக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

flydubai omani copilot enquiries secret informations
காஸாவுக்கு பழிவாங்க திட்டம்.. ஈரானுடன் தொடர்பு? துணை விமானியின் அதிர்ச்சிப் பின்னணி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com