\
Fleeing Iranian Missiles... Is the US Abandoning Gulf Bases?
US troops Reuters

ஈரான் ஏவுகணைகளுக்கு பயந்து ஓட்டம்.. வளைகுடாவை காலி செய்யும் அமெரிக்கா!!

ஈரானின் அடுத்தடுத்த தாக்குதல்.. மத்திய கிழக்கை விட்டு வெளியேறும் அமெரிக்கா.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ஈரான் மீதான அமெரிக்கா , இஸ்ரேல் தாக்குதல்கள் பிப்ரவரி 28 அன்று தொடங்கியது. போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா பகுதியில் அமெரிக்காவுக்கு உதவி செய்த பல நாடுகளின் மீது தாக்குதல்களை நடத்தியது ஈரான். சேமிப்புக் கிடங்குகள், செயல்பாடுகளை நிர்வகிக்கும் கட்டளை மையங்கள், விமான தளங்கள் மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் அமைப்புகள் உள்ளிட்ட குறைந்தது ஏழு நாடுகளில் உள்ள முக்கியமான அமெரிக்காவின் இராணுவத் தளங்களைத் தாக்கியுள்ளது ஈரான் ராணுவம்.

US troops
US troops reuters

மேலும், ராணுவ நகர்வு மற்றும் கண்காணிப்புக்கு இன்றியமையாத ஓடுபாதைகள், ரேடார் அமைப்புகள் மற்றும் விமானங்களையும் சேதப்படுத்தியது. இவ்வாறு அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் இருந்து தனது படைகளை வேறு பகுதிகளுக்கு மாற்ற அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, Horn of Africa என்ற பகுதியில் புதிய ராணுவத் தளங்களை அமைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாகப் பேசிய, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) செய்தித் தொடர்பாளர் ஹுசைன் மொஹேபி, ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தாக்குதல் எல்லைக்குள் அமெரிக்காவின் பல ராணுவத் தளங்கள் இருப்பதாகத் தெரிவித்தார். இதனால், அந்தத் தளங்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், கென்யா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் புதிய ராணுவக் கட்டமைப்புகளை உருவாக்க அமெரிக்கா முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். மேலும், ஈரானின் தாக்குதலால் சில அமெரிக்க ராணுவத் தளங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டதாகவும், சில செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

US troops
US troops Reuters

இதற்கிடையே, பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள தனது ராணுவ தளங்களை மாற்ற அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது கப்பற்படையின் தலைமையகத்தில் முன்பு 8,000-க்கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் இருந்தனர். ஆனால், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பிறகு அங்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களே இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ராணுவத் தளத்தில் 400 மில்லியன் டாலருக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் ஆய்வு சேவை மதிப்பிட்டுள்ளது.

இதனால், அமெரிக்க வீரர்களை இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு மாற்றுவது குறித்தும் பென்டகன் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Fleeing Iranian Missiles... Is the US Abandoning Gulf Bases?
ஸ்டார்லிங்கை ஆயுதமாக்கிய ஈரான்.. கடும் கோபத்தில் எலான் மஸ்க்!