நிலைகுலையும் ஹமாஸ்.. முக்கிய பெண் தலைவர் ஜமீலா பலி.. இஸ்ரேல் ராணுவம் தகவல்!

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவில் முதல் பெண் தலைவரான ஜமீலா அல் சான்தீயை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜமீலா அல் சான்தீ
ஜமீலா அல் சான்தீட்விட்டர்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 13வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல்
இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல்PTI

இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள், கட்டடங்கள் குண்டுவீச்சால் உருக்குலைந்து போய் இருக்கின்றன. இந்த நிலையில், ஹமாஸின் தாக்குதலை அடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேலுக்குச் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் ஆகியோரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜமீலா அல் சான்தீ
’இஸ்ரேலின் இருண்டநேரத்தில் உங்களுடன் உங்கள் நண்பராக நிற்பதில் நான் பெருமைப்படுகிறேன்’ - ரிஷி சுனக்

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவில் முதல் பெண் தலைவரான ஜமீலா அல் சான்தீயை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காஸாவின் சட்டசபையில் பணியாற்றிய 2 பெண் தலைவர்களில் ஜமீலாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட வருடங்களாக ஜமீலா மீது இஸ்ரேல் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது.

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் இருக்கும் குழு புகைப்படத்தில், 4 முக்கிய தலைவர்களை கொன்றுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் வட்டமிட்டு தேதியையும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தேசிய பாதுகாப்புப் படையின் தலைவரான ஜெஹாத் மெய்சென் மற்றும் அவரது குடும்பத்தினர் காஸாவில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: "இதை செய்வீங்களா?”-IND Vs PAK போட்டியில் தங்க ஐபோனை தவறவிட்ட நடிகை; கண்டுபிடித்த நபர் வைத்த கோரிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com