\
FBI hack
FBI hackReuters

’ஹேக் செய்யப்பட்ட FBI..’ ட்ரம்பை அதிரவைக்கும் ரகசியங்கள் வெளி வருமா?

அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தகவல்கள் சைபர் தாக்குதலுக்கு இலக்கா?
Published on: 
Summary

அமெரிக்க FBI தரவுத்தளம் ஹேக் செய்யப்பட்டதால் முக்கிய குற்றவியல் தகவல்கள் வெளியாவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது. ட்ரம்ப் இதை நல்ல செய்தி அல்ல எனக் கூறியபோதும், இதுவரை வெளிவராத உண்மைகள் தெரியவரலாம் எனக் குறிப்பிட்டார்.

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI பராமரித்து வரும் முக்கிய குற்றவியல் தகவல் தரவுத்தளம் ஹேக் செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இதன் மூலம் இதுவரை வெளிவராத சில தகவல்கள் தெரியவரலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தேசிய குற்றவியல் தகவல் மையம் (National Crime Information Center - NCIC) என்ற இந்தத் தரவுத்தளத்தில், தேடப்படும் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், குற்றப் பின்னணி விவரங்கள், திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் சொத்துகள் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இந்தத் தகவல்களைத் தங்களது விசாரணைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

TRUMP
TRUMPANI

இந்நிலையில், இந்தத் தரவுத்தளம் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவலைத் தொடர்ந்து FBI விசாரணையைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், இந்த சைபர் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள், என்னென்ன தகவல்கள் திருடப்பட்டுள்ளன, தரவுகள் மாற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எஃப்பிஐயும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய ட்ரம்ப், இந்த ஹேக்கிங் சம்பவம் நல்ல செய்தி அல்ல என்று தெரிவித்தார். அதேநேரத்தில், இதன் மூலம் இதுவரை வெளிவராத சில உண்மைகள் தெரியவரலாம் என்றும் கூறினார்.

FBI
FBIreuters

குறிப்பாக, 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான விசாரணை, உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் தான் நடத்திய தொலைபேசி உரையாடல் தொடர்பான சர்ச்சை உள்ளிட்ட விவகாரங்களை அவர் மீண்டும் குறிப்பிட்டார். இந்தத் தொலைபேசி உரையாடல் தொடர்பான விவகாரம்தான் ட்ரம்பின் முதல் பதவி நீக்க விசாரணைக்கு வழிவகுத்தது.

ஆனால், இந்தப் பழைய அரசியல் விவகாரங்கள் தொடர்பான ஆவணங்கள் NCIC தரவுத்தளத்தில் இருப்பதாக எந்தத் தகவலும் இல்லை. எனவே, ஹேக்கிங் மூலம் அந்த ஆவணங்கள் வெளியாகும் எனக் கூற முடியாது.

இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதமும் FBI இன் வேலைவாய்ப்பு இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாகவும், ஊழியர்கள் மற்றும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய அரசு அமைப்புகள் சைபர் தாக்குதலுக்கு இலக்காகி வருவது பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

FBI hack
அரபு கட்சிகளுக்கு அடுத்த ஷாக்: மீண்டும் பவர் சென்டராகும் நெதன்யாகு.. ட்விஸ்ட் கொடுத்த ஐசன்கோட்!