\
Elon Musk’s “Instagram Is for Girls” Remark Sparks Debate
Elon muskReuters

“இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது” சர்ச்சையைக் கிளப்பிய எலான் மஸ்க்!! மெட்டாவுக்கு எதிரான போட்டி?

“இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது” என எலான் மஸ்க் தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் மீண்டும் பாலின பாகுபாடு குறித்தான விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
Published on: 

உலகளவில் இளைஞர்கள் பயன்படுத்தும் சமூக ஊடக செயலிகளில் மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் முக்கியமானது. 300 கோடிக்கும் அதிகமான ஆக்டிவ் பயனர்களைக் கொண்ட இந்தச் செயலில், ஏறத்தாழ ஆண்களும் பெண்களும் சமமாக இருப்பதாகவே தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தச்சூழலில் தான், நேற்றைய தினம் ”இன்ஸ்டாகிராம் கணக்கை தான் நீக்கிவிட்டதாகவும், அந்தத் தளம் அடிப்படையிலேயே பெண்களை மையப்படுத்திய செயலி” என்றும் எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது” என மீண்டும் ஒரு தெரிவித்திருக்கிறார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பாலின பாகுபாடு குறித்தான விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது..

NGMPC059

அதேசமயம், இன்ஸ்டாகிராம் குறித்து மஸ்க் இதுபோன்று கருத்து தெரிவிப்பது இது முதல்முறையல்ல. கடந்த மே மாதத்திலும், சமூக வலைதளப் பயன்பாடு குறித்து வைரலான ஒரு விவாதத்தில் பதிலளித்தபோது, இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது என அவர் தெரிவித்திருந்தார். அப்போது, இன்ஸ்டாகிராம் கணக்குகளை தன்னிடம் பகிரும் ஆண்கள் குறித்தும் அவர் கேலி செய்திருந்தார். அதேசமயம், இவ்விதமான மஸ்கின் கருத்துக்களுக்கு, எக்ஸ் மற்றும் மெட்டா நிறுவனத்துடனான நீண்ட கால போட்டியின் பின்னணியாகவும் பார்க்கப்படுகிறது.

Elon Musk’s “Instagram Is for Girls” Remark Sparks Debate
வெளியேறிய அமெரிக்கப் படைகள்.. மகிழ்ச்சியில் ஈரான்.. ஈராக்கிற்கு காத்திருக்கும் அடுத்த சவால்!

குறிப்பாக, மெட்டா நிறுவனம் 2023-ஆம் ஆண்டு Threads செயலியை அறிமுகப்படுத்திய பின்னர், எக்ஸ் மற்றும் Threads இடையேயான போட்டி கவனம் பெற்றது. ஏனெனில், Thereads-ஐ எக்ஸ்-ன் நேரடி சவலாக கருதினார் எலான் மஸ்க். அந்த சமயத்தில், எலான் மஸ்க்கும், மெட்டாவின் தலைமை நிர்வாகியுமான மார்க் ஜுக்கர்பெர்க் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டதும் பேசுபொருளாகியிருந்தது. இந்தச்சூழலில் தான், இஸ்ண்டாகிராம் பக்கத்தை மஸ்க் விமர்சித்து வருகிறார். அதேசமயம், இருவர்களிடையேயான போட்டி செயற்கை நுண்ணறிவுத்துறைகளிலும் விரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Elon Musk’s “Instagram Is for Girls” Remark Sparks Debate
உலகை உலுக்கிய Flydubai சம்பவம்! ஈரான் மீது திரும்பும் சந்தேகம்.. கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com