சினிமாவை மிஞ்சிய நிஜம்! பறக்கும் காரை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்!
செய்டியாளர் - M. மீரா
பறக்கும் கார் என்பது இனி அறிவியல் புனைகதைகளில் மட்டுமே வரும் கற்பனை அல்ல என்று கூறும் வகையில், டெஸ்லா நிறுவனம் Roadster 2 என்ற கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்லாவின் அடுத்த தலைமுறை Roadster 2 கார், பறக்கும் கார் என்ற தனது கனவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. ராக்கெட்டைப் போன்ற உந்துவிசைக் கருவிகளின் உதவியுடன், இந்த மின்சார ஸ்போர்ட்ஸ் கார் சிறிது நேரம் தரையிலிருந்து மேலே சென்று , பின்னர் பாதுகாப்பாகத் தரையிறங்கும் விதமாக உருவாக்கப் பட்டுள்ளது
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் சோதனை மையத்தில் இந்த காரைச் செயல் விளக்கம் செய்து காட்டியுள்ளது.
இந்தச் செயல்விளக்கத்தின்போது, மின்சாரத்தில் இயங்கும் ரோட்ஸ்டர் 2 கார் வளைந்த பாதையில் சென்று, சில நொடிகள் காற்றில் பறந்துவிட்டு மீண்டும் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. மேலும், டெஸ்லாவின் சைபர்டிரக் உள்ளிட்ட கார்களுக்கு மேலே பறந்து செல்வது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது
இந்தக் காரின் தொழில்நுட்பம் குறித்து டெஸ்லாவின் வாகனப் பொறியியல் பிரிவுத் தலைவர் லார்ஸ் மொராவி விளக்கம் அளித்துள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உந்துவிசைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார் காற்றில் மேலே உயர்ந்து போகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக, 600 லிட்டர் அழுத்தப்பட்ட காற்றுடன் இணைக்கப்பட்ட 10 உந்துவிசைக் கருவிகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கார் மணிக்கு சுமார் 96 கி.மீ. வேகத்தை வெறும் ஒரு நொடியில் எட்டும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தக் கார், பல ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்து வருகிறது. தற்போது, இதன் உற்பத்தி 2028ஆம் ஆண்டு தொடங்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த Roadster 2 காரில் Performance, Thrust, Rocket என மூன்று வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முதல் வகைக்கு முன்பதிவு செய்ய 50,000 டாலரும், இரண்டாவது வகைக்கு 2.5 லட்சம் டாலரும் செலுத்த வேண்டும். உயர்தர ராக்கெட் வகைக்கு கேட்டால் மட்டுமே உருவாக்கி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

