\
Reliance Ready to Compete with Starlink as Musk-Ambani Clash Escalates
Musk - AmbaniReuters Via ANI

எலான் மஸ்க் Vs முகேஷ் அம்பானி.. ஸ்டார்லிங் உடன் போட்டிக்குத் தயார்.. ரிலையன்ஸ் பதிலடி!!

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி கிடைப்பது தொடர்பாக, எலான் மஸ்க் மற்றும் முகேஷ் அம்பானி இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங் நிறுவனத்துடன் போட்டிக்கு தாயார் என ரிலையன்ஸ் நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.
Published on: 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங்க்-ஐ, இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டுவர 2021 முதல் முயன்று வருகிறார். ஆனால், அந்நிறுவனத்திற்கு அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் தான், சில தனியார் முதலாளிகளின் நலனுக்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஸ்டார்லிங்க் சேவை இந்திய மக்களுக்குக் கிடைக்காமல் தடுத்து வருவதாக எலான் மஸ்க் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார். குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியைக் குறிப்பிட்டு, இந்தியாவில் உண்மையான அதிகாரம் அவரிடம்தான் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

கோப்புபடம்
கோப்புபடம்AI

இவ்வாறு, எலான் மஸ்க் முகேஷ் அம்பானியின் பெயரை நேரடியாக குறிப்பிட்டு விமர்சித்திருந்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. இந்தச்சூழலில் தான், எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டுகளுக்கு தற்போது பதிலளித்துள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டு நிறுவனமாக இருந்தாலும் வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும், அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளே பொருந்தும். இந்தியாவின் சட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் உட்பட்டுச் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

Reliance Ready to Compete with Starlink as Musk-Ambani Clash Escalates
இனி Truecaller தேவையில்லை? போனில் வரப்போகும் புதிய வசதி! நவம்பர் 1 முதல் அமல்?

மேலும், ஜியோவின் சொந்த செயற்கைக்கோள் இணையச் சேவைகளுக்கும் அரசின் அனுமதிகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், போட்டியைக் கண்டு ஒருபோதும் அஞ்சியதில்லை; ஸ்டார்லிங் உடன் போட்டியிட தயாராகவே இருக்கிறோம். போட்டி இருப்பதுதான், வாடிக்கையாளர்களுக்கு யார் சிறந்த சேவையை வழங்குகிறார்கள் என்பதை நிரூபிக்கும் உண்மையான சோதனை என்றும் கூறியுள்ளது. மேலும், 2016-ஆம் ஆண்டு தொலைத்தொடர்புச் சந்தையில் புதிதாக நுழைந்த ஜியோ, இன்று 53 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக, இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவைகளை வழங்குவதற்கான அனுமதி நடைமுறைகள் நியாயமானவையே என்றும், எந்த நிறுவனத்திற்கும் பாகுபாடு காட்டப்படவில்லை என்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது. மேலும், ஸ்டார்லிங்க் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களின் பாதுகாப்பு மதிப்பீடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Reliance Ready to Compete with Starlink as Musk-Ambani Clash Escalates
இப்படி பிறந்ததுதான் ஜியோவா?இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் இஷா அம்பானி சொன்ன கதை!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com