நேற்று கூகுள்.. இன்று டெஸ்லா.. தொடரும் பணிநீக்கம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

டெஸ்லா நிறுவனத்தில் மூத்த தலைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்ட்விட்டர்

டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளராக இருப்பவர், எலான் மஸ்க். இவர், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தைக் கைப்பற்றியது முதல், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். ஆட்குறைப்பு, பெயர் மாற்றம், கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது அவருடைய டெஸ்லா நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம் பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில், மின்சார வாகனங்களுக்கான சூப்பர் சார்ஜர் வணிக பிரிவின் தலைவர் ரெபெக்கா டினுச்சி மற்றும் புதிய தயாரிப்புகள் குழுவின் தலைவர் டேனியல் ஹோ ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் டெஸ்லாவின் உயர் அலுவலர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரெபெக்கா டினுச்சி மற்றும் டேனியல் ஹோ ஆகியோரின் கீழ் பணியாற்றிய 500-க்கும் அதிகமான பணியாளர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம்| EDயிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி.. பதிலளிக்க உத்தரவு!

எலான் மஸ்க்
2024ல் 14 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா.. மெயில் அனுப்பிய எலான் மஸ்க்; கவலையில் ஊழியர்கள்!

மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களிடையே நிலவிவரும் விலை போட்டி மற்றும் குறைந்துவரும் விற்பனையே இந்தப் பணிநீக்கத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இது, டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களில் உலக அளவில் பணிபுரியும் ஊழியர்களைக் கவலையடையச் செய்துள்ளது. இதுகுறித்து ஊழியர்களுக்கு எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில், “பணியாளர்கள் மற்றும் செலவுக் குறைப்பில் நாம் மிக கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதை இந்த நடவடிக்கைகள் உணர்த்தும் என நம்புகிறேன். சில உயர் அலுவலர்கள் இதனை முக்கியமாக எடுத்துக்கொள்கிறார்கள், மற்றவர்கள் அவ்வாறு எடுத்துக்கொள்வதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதாவது கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, மின்சார வாகனத் தேவையின் மந்தநிலை காரணமாக, 10%-க்கும் அதிகமான பணியாளர்களை மீண்டும் குறைக்கும் பணியில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்ததுடன், அதுகுறித்தும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, சமீபத்தில் கூகுள் நிறுவனமும், பைத்தான் (python) குழுவில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதையும் படிக்க: பீகார்| போதையில் மாப்பிள்ளை.. திருமணத்தை நிறுத்தி மணமகனின் குடும்பத்தை சிறைபிடித்த மணப்பெண்!

எலான் மஸ்க்
பைத்தான் குழுவினர் பணிநீக்கம்.. மீண்டும் களத்தில் குதித்த கூகுள்.. குடும்பத்தினர் அதிர்ச்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com