\
Xi  Jinping & Elon Musk
Xi Jinping & Elon Musk reuters

சீன அதிபரை புகழ்ந்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

சீன அதிபர் XI ஜின்பிங் தலைமையில் நாட்டின் அதிவேக வளர்ச்சி, உள்கட்டமைப்பு முன்னேற்றம், மக்களின் வாழ்க்கைத் தர உயர்வை எடுத்துக்காட்டி எலான் மஸ்க் அவரைப் புகழ்ந்துள்ளார்.
Published on
Summary

சீன அதிபர் XI ஜின்பிங் தலைமையில் சீனாவின் அதிவேக வளர்ச்சி, புதிய கட்டடங்கள், உள்கட்டமைப்பு முன்னேற்றம், மக்களின் வாழ்க்கைத் தர உயர்வு ஆகியவற்றை எடுத்துக்காட்டி எலான் மஸ்க் புகழ்ந்து பேசியுள்ளார். ஷாங்காய் டெஸ்லா தொழிற்சாலை உலகின் மிகப்பெரிய உற்பத்தி, ஏற்றுமதி மையமாக இருப்பதையும், அங்குள்ள ஊழியர்கள் திறமையானவர்கள், கடின உழைப்பாளர்கள் எனவும் பாராட்டியுள்ளார்.

செய்தியாளர் - M.மீரா

சீன அதிபர் XI ஜின்பிங்கை, டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், ’சிறந்த தலைவர்’ எனப் பாராட்டியுள்ளார். சீன அரசு தொலைக்காட்சியான CCTV-க்கு அளித்த பேட்டியில் மஸ்க் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Xi ஜின்பிங்கின் தலைமையின் கீழ் சீனா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக மஸ்க் கூறினார். சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், அந்நாட்டு மக்களின் சராசரி வாழ்க்கையில் தரமும் செழிப்பும் அதிகரித்திருப்பது தெரிகிறது எனத் தெரிவித்தார்.

Xi Jinping
Xi JinpingReuters

மேலும், சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள டெஸ்லா தொழிற்சாலை குறித்தும் மஸ்க் பாராட்டிப் பேசினார். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மிகவும் திறமையானவர்கள், கடினமாக உழைப்பவர்கள் மற்றும் நம்பகமானவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

டெஸ்லாவின் ஷாங்காய் தொழிற்சாலை ஒரு ரத்தினம் போன்றது என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லாவின் மிகப்பெரிய உற்பத்தி மையமாகவும், உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி மையமாகவும் ஷாங்காய் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் XI ஜின்பிங் சந்திக்க உள்ளனர். இந்த ஆண்டில் இரு தலைவர்களும் சந்திக்கும் இரண்டாவது உச்சி மாநாடு இதுவாகும். வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்த சந்திப்பில் இடம்பெற உள்ளன.

Tesla in China
Tesla in ChinaReuters

இந்நிலையில், ட்ரம்ப் வழங்கும் அரசு விருந்தில் அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்களுடன் மஸ்கும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் ஷாங்காய் ஆலையில் தயாரிக்கப்பட்ட Model 3 மற்றும் Model Y கார்களின் விற்பனை முந்தைய ஆண்டைவிட 3.6% அதிகரித்திருந்தாலும், முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது வளர்ச்சி வேகம் குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Xi  Jinping & Elon Musk
அமெரிக்கா முதல் துருக்கி வரை... ஹவுதியின் அதிரடி warning !
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com