\
Houthis
Houthis Reuters

அமெரிக்கா முதல் துருக்கி வரை... ஹவுதியின் அதிரடி warning !

அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான், துருக்கி நேரடி ராணுவ ஆதரவு வழங்கினால் போரை விரிவுபடுத்த ஹவுதி எச்சரிக்கிறது.
Published on
Summary

ஏமனின் ஹவுதி அமைப்பு, சவுதி அரேபியாவுக்கு எதிரான தாக்குதலைத் தொடரும் என்றும், ரியாத்துக்கு நேரடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளையும் போரில் இழுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Bab el-Mandeb நீரிணை அருகே மோதல் தீவிரமாவதால் செங்கடல்–ஏடன் வளைகுடா கடல்வழி, உலக வர்த்தகம், எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

செய்தியாளர் - M. மீரா

மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஏமனின் ஹவுதி அமைப்புக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

சவுதி அரேபியாவுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகள் தொடரும் என ஹவுதி தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹவுதி அரசியல் பிரிவு உறுப்பினர் முகமது அல்-புகைதி, சவுதியுடன் இணைந்து மோதலில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராகவும் போரை விரிவுபடுத்தத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த மோதலில் ஹவுதிகளின் ஆக்கிரமிப்பு Bab el-Mandeb நீரிணைக்கு அருகில் சென்றிருப்பது சர்வதேச வர்த்தகத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

houthi - yemen war
houthi - yemen war Reuters

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் இந்த முக்கிய கடல்வழி, உலக வர்த்தகத்துக்கு முக்கியமான பாதையாகும். இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி விநியோகம் மற்றும் சர்வதேச சரக்கு போக்குவரத்திலும் தாக்கம் ஏற்படக்கூடும்.

சமீபத்திய தாக்குதல்களில் சவுதி தலைநகர் ரியாத்தை நோக்கியும் ஹவுதிகள் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சவுதி தனது வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த உதவியை நாடியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சவுதிக்கு ஆதரவாக பிரிட்டன் வரையறுக்கப்பட்ட ராணுவ உதவியை வழங்க முடிவு செய்துள்ளது. சவுதி அரேபியா விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, சவுதி விமானப்படைக்கு தற்காப்பு நடவடிக்கைகளுக்கான வான்வழி எரிபொருள் நிரப்பும் (air-to-air refuelling) ஆதரவை வழங்க பிரிட்டன் ஒப்புக்கொண்டுள்ளது.

RAF Voyager
RAF Voyager reuters

இதற்காக ஒரு RAF Voyager விமானத்தை அனுப்ப இருப்பதாக பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது. இந்த உதவி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்றும், பின்னர் நிலைமையைப் பொறுத்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளது பிரிட்டன்.

முக்கியமாக, ஹவுதி இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பிரிட்டிஷ் விமானங்கள் நேரடியாகப் பயன்படுத்தப்படாது; சவுதி விமானங்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த ஆதரவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு எதிரான மோதலில் மற்ற நாடுகள் களமிறங்கினால், போர் மேலும் விரிவடையும் என ஹவுதி தலைமை எச்சரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ரியாத்துக்கு நேரடி ராணுவ ஆதரவு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என ஹவுதி தரப்பு கூறியுள்ளது.

Iran Woos Pakistan & Turkey as Houthi Attacks Put Saudi Under Pressure
HouthisReuters

இந்த எச்சரிக்கை வெளியாகும் நேரத்தில், சவுதி அரேபியா–பாகிஸ்தான்–துருக்கி இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. துருக்கி, சவுதிக்கு ராணுவ மற்றும் தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்காவை பொறுத்தவரை ஹவுதிகளின் நிலைப்பாடு சற்று மாறுபட்டதாக உள்ளது. ஓமன் வழியாக அமெரிக்கா–ஹவுதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், அமெரிக்க கப்பல்களைத் தாக்கும் நோக்கம் தற்போது இல்லை என ஹவுதி தரப்பு உறுதியளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சவுதி நடவடிக்கையில் நேரடியாக இணைந்தால், மோதல் மேலும் விரிவடையும் என்ற எச்சரிக்கையும் ஹவுதி தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

Houthis
HouthisReuters

இதனால், ஹவுதியின் எச்சரிக்கை தற்போது சவுதி–ஏமன் எல்லையைத் தாண்டி, அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் துருக்கி உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய மோதலாக இந்தப் பிரச்சினை மாறக்கூடும் என்ற கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Houthis
சூடான் | தங்கத்துக்காக உயிரைப் பணயம் வைக்கும் மக்கள்.. சுரங்கத்தில் அடுத்தடுத்து மரணம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com