ட்ரம்ப் பதவியேற்பு விழா | நாஜி வணக்கம் செலுத்தி சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க்!
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று (ஜனவரி 20) பதவியேற்றார். அவருக்கு உலகத் தலைவர்களும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். அந்நிகழ்வின் ஒரு பகுதியாக, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரருமான எலான் மஸ்கும் உரையாற்றினார். இவர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், “என் இதயம் உங்களை நேசிக்கிறது. மேலும், உங்களால்தான் நாகரிகத்தின் எதிர்காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு நன்றி. நமக்குப் பாதுகாப்பான நகரங்கள், பாதுக்காப்பான எல்லைகள் சாத்திய்மாக உள்ளது” என்றார்.
ஆனால், அவருடைய கருத்துகளைவிட, அவர் செலுத்திய வணக்க முறைதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, எலான் மஸ்க் தனது வலது கையை மார்பில் அறைந்து, பின்னர் விரல்களை ஒன்றாக இணைத்து, உள்ளங்கையை கீழ்நோக்கி வைத்து, நீட்டி முழக்கமிட்டார்.
எலான் மஸ்கின் இந்தச் செயலே தற்போது உலகம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அப்போதே பலரும் குரல் கொடுத்தபோதும், மீண்டும் மீண்டும் அவர் செய்ததாகக் கூறப்படுகிறது. நாஜி பாணியில் வணக்கம் தெரிவிக்கும் இந்த முறையையும் எலான் மஸ்க் தமது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இது, இணையத்தில் வைரலாவதுடன், அதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
யூத எதிர்ப்புக்கு எதிராக பிரசாரம் செய்கிற ADL (தி ஆண்டி-டெஃமமேஷன் லீக்) என்ற அமைப்பு, எலான் மஸ்கின் இச்செயலை ’நாஜி பாணி வணக்கம்’ எனக் குறிப்பிட்டுள்ளது. ADL அமைப்பு குறிப்பிடுகையில், ”1933 மற்றும் 1945க்கு இடையில் ஜெர்மனியில், நாஜி வணக்கம் பெரும்பாலும் ‘ஹெய்ல் ஹிட்லர்’ அல்லது ‘சீக் ஹெய்ல்’ என்று முழக்கமிடுவது அல்லது கூச்சலிடுவதுடன் தொடர்புடையது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நவ-நாஜிக்களும் பிற வெள்ளை மேலாதிக்கவாதிகளும் தொடர்ந்து இந்த வணக்கத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இது உலகின் மிகவும் பொதுவான வெள்ளை மேலாதிக்க வணக்க அடையாளமாக பார்க்கப்படுகிறது” எனக் குற்றஞ்சாட்டி உள்ளது.
அதேபோல், இஸ்ரேலிய ஊடகமான Haaretz, “எலான் மஸ்க் நாஜி ஜெர்மனியுடன் தொடர்புடைய ஒரு பாசிச வணக்கமான ரோமன் வணக்கத்தை நேரலை செய்துள்ளார்” என செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக சமீபத்திய மாதங்களில், தீவிர வலதுசாரிகளை ஆதரிப்பதை எலான் மஸ்க் வழக்கமாக கொண்டுள்ளார். ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் எலான் மஸ்க் மீதான குற்றச்சாட்டாகவே இதை முன்வைத்துள்ளனர். பொதுவாக, சமீபத்திய மாதங்களில், தீவிர வலதுசாரிகளை ஆதரிப்பதை எலான் மஸ்க் வழக்கமாகக் கொண்டுள்ளார். ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் எலான் மஸ்க் மீதான குற்றச்சாட்டாகவே இதை முன்வைத்துள்ளன.