“எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாகக் குழுவில் இணையவில்லை” - டிவிட்டர் சிஇஓ

“எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாகக் குழுவில் இணையவில்லை” - டிவிட்டர் சிஇஓ
“எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாகக் குழுவில் இணையவில்லை” - டிவிட்டர் சிஇஓ

டிவிட்டர் நிறுவத்தின் 9.2 % பங்குகளை வைத்திருந்த போதும் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் இணைய மறுத்துவிட்டதாக அந்நிறுவன சிஇஓ பராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள “டெஸ்லா” நிறுவனர் எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கினார்.
அமெரிக்க பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அவர் அளித்த தகவலின் படி, தற்போது 7 கோடியே 34 லட்சம் டிவிட்டர் நிறுவன பங்குகள் அவரிடம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒரு புதிய சமூக ஊடக தளத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக எலோன் மஸ்க் மார்ச் மாதம் இறுதியில் கூறியிருந்த நிலையில், டிவிட்டர் நிறுவன பங்குகளை வாங்கினார்.

இதையடுத்து எலாக் மஸ்கை டிவிட்டர் நிர்வாக குழுவில் இணைக்க விரும்புவதாக அந்நிறுவன சிஇஓ பராக் அகர்வால் தெரிவித்தார். “அவர் ஒரு தீவிர விசுவாசி மற்றும் எங்கள் சேவையின் தீவிர விமர்சகர். விமர்சனங்கள் எங்களுக்கு தேவையானது. நீண்ட காலத்திற்கு எங்களை வலிமையாக்க. எலானை நிர்வாகக் குழுவிற்கு வரவேற்கிறோம்!” என்று தெரிவித்தார் பராக் அகர்வால். ஆனால் நிர்வாகக் குழுவில் இணைவதை எலான் விரும்பவில்லை.

இந்த தகவலையும் பராக் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “எலான் நிர்வாகக் குழுவில் சேர்வது குறித்து அவருடன் நேரடியாக பல விவாதங்கள் நடத்தினோம். அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களைப் போல எலானை நிறுவனத்தின் நம்பிக்கையாளராக வைத்திருக்க, நாங்கள் ஆபத்துகள் பற்றி தெளிவுபடுத்துவதில் உற்சாகமாக இருந்தோம். நிறுவனம் மற்றும் எங்கள் பங்குதாரர்கள் அனைவரின் நலன்களுக்காகச் செயல்பட வேண்டும் என்பதுதான் சிறந்த முன்னோக்கிய பாதை என்று நாங்கள் நம்பினோம்.

பின்னணிச் சரிபார்ப்பு மற்றும் முறையான ஏற்புமுறையின் பேரில் எலோன் வாரியக் குழுவில் நியமிக்கப்படுவார் என்று செவ்வாயன்று அறிவித்தோம். ஆனால் அதே காலையில் தான் இனி குழுவில் சேரமாட்டேன் என்று எலோன் பகிர்ந்து கொண்டார். எங்கள் பங்குதாரர்கள் எங்கள் நிர்வாக குழுவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களின் உள்ளீட்டை நாங்கள் எப்போதும் மதிப்போம். எலோன் எங்களின் மிகப்பெரிய பங்குதாரர் மற்றும் அவரது உள்ளீட்டிற்கு நாங்கள் எப்போதும் செவி சாய்ப்போம்” என்று பராக் அகர்வால் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com