திரைப்படமாகும் எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறு

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்pt web

வால்டர் ஐசக்சன்... CNN நிறுவனத்தின் முன்னாள் CEOவும் அமெரிக்க எழுத்தாளரான இவர் பல்வேறு தலைவர்கள், அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை புத்தகங்களாக எழுதி புகழ்பெற்றவர். சமீபத்தில் இவர் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி இருந்தார்.

இப்புத்தகத்தை எழுத வால்டர் ஐசக்சன், எலான் மஸ்க் உடன் மீட்டிங்களில் கலந்து கொண்டார். அவருடன் தொழிற்சாலைகளுக்கும் சென்றுள்ளார். அவரது நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் நேர்காணல் செய்யப்பட்டு இப்புத்தகம் உருவாக்கப்பட்டிருந்தது. விற்பனையிலும் இந்த புத்தகம் சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில் இப்புத்தகத்தை மையமாக வைத்து எலான் மஸ்க் வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளது. அமெரிக்க திரைப்பட இயக்குநரான டேரன் அரோனோஃப்ஸ்கி இத்திரைப்படத்தினை இயக்க உள்ளார். Pi, Requiem for a Dream, The Fountain போன்ற பல்வேறு திரைப்படங்களை டேரன் அரோனோஃப்ஸ்கி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தினை A24 என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

அரோனோஃப்ஸ்கி 2022- ஆம் ஆண்டு The Whale எனும் திரைப்படத்தினை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் பிரெண்டன் ஃப்ரேசர் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் எனும் பிரிவில் ஆஸ்கர் விருதையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com