\
DR Congo Sentences 66 Soldiers to Death for Fleeing Battlefield
காங்கோ ராணுவ வீரர்கள்Reuters

போர்களத்தில் இருந்து தப்பியோட்டம்? 66 வீரர்களுக்கு ம*ண தண்டனை!! காங்கோ அரசு அதிரடி!!

கடந்த மாதம் அரசுப்படை ராணுவத்தினர் சிலர், கிளர்ச்சிக்குழுக்கு எதிரான மோதலின்போது, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ராணுவ நிலைகளைக் கைவிட்டு, எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்ளாமல் பயந்து தப்பியோடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
Published on: 

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், போர்க்களத்தில் இருந்து தப்பியோடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 66 ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சிகர பின்னணி குறித்துப் பார்க்கலாம்.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் அதிபராக 2019-ம் ஆண்டு முதல் பெலிக்ஸ் டிசிசெகெடி (Félix Tshisekedi) இருந்து வருகிறார். இவரின் ஆட்சியைக் கலைக்கும் நோக்கில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜோசப் கபிலா தலைமையில், பல்வேறு கிளர்ச்சிக்குழுக்கள் அடங்கிய FRN (Front for the Refoundation of the Nation) எனப்படும் கிளர்ச்சிக் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த இருதரப்புக்கும் இடையே, நாட்டின் கிழக்குப் பகுதியான வடக்கு கிவு (North Kivu) மாகாணத்தில் உள்ள வாலிகேல் (Walikale) பகுதியில் நீண்டகாலமாக இருந்துவரும் ஆயுத மோதல், கடந்த 2025-ம் ஆண்டு முதல் தீவிரமடைந்திருக்கிறது.

காங்கோ
காங்கோReuters

இந்தச்சூழலில் தான், கடந்த மாதம் அரசுப்படை ராணுவத்தினர் சிலர், கிளர்ச்சிக்குழுக்கு எதிரான மோதலின்போது, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ராணுவ நிலைகளைக் கைவிட்டு, எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்ளாமல் பயந்து தப்பியோடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி 71 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு வாலிகேல் பகுதியில் உள்ள கோமா காரிசன் ராணுவ நீதிமன்றம் விசாரித்து வந்தது.

DR Congo Sentences 66 Soldiers to Death for Fleeing Battlefield
லாகூரில் அதிகரித்த காற்று மாசு.. இந்திய நகரங்களே காரணம்.. பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு?

இந்நிலையில் தான், இந்த விசாரணையின் முடிவில் தற்போது , 66 வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 வீரர்கள் உரிய ஆதாரங்கள் கிடைக்காததால் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மற்றொரு ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, எதிரிகளுக்கு முன்னால் துணிச்சலின்றி பின்வாங்கியது, ராணுவக் கலகத்தில் ஈடுபட்டது, மேலதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Reuters

இந்த நடவடிக்கை குறித்து விளக்கமளித்த காங்கோ ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் டியூடோன் கசெரேகா (Major Dieudonné Kasereka), நாட்டின் கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் ராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில், படைகளுக்குள் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் உறுதிப்படுத்தவே இந்த விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 20 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, 2024 மார்ச் மாதம் அந்நாட்டு அரசு மீண்டும் அமல்படுத்தியிருக்கிறது. ராணுவத்திற்குள் துரோகம் மற்றும் கடுமையான குற்றங்களைத் தடுப்பதே இதன் நோக்கம் என அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால், மனித உரிமை அமைப்புகள் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும், கடந்த 2025-ம் ஆண்டு முதல் தற்போது வரை அந்நாட்டில் 381 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

DR Congo Sentences 66 Soldiers to Death for Fleeing Battlefield
ஈரான் விமானத்தைத் தரையிறங்கவிடாமல் திருப்பி அனுப்பிய ஈராக்!