\
Pakistan Blames India for Lahore’s Rising Air Pollution
Air PollutionReuters

லாகூரில் அதிகரித்த காற்று மாசு.. இந்திய நகரங்களே காரணம்.. பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு?

உலகின் அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் புதுடெல்லியும், பாகிஸ்தானின் லாகூரும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றன.
Published on: 

பாகிஸ்தானின் லாகூர் நகரில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, தீபாவளி நாளான நவம்பர் 8-ஆம் தேதி, அந்நகரின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடான AQI (Air Quality Index) 600-ஐக் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், லாகூரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு இந்தியாவில் இருந்து வரும் மாசடைந்த காற்றே காரணம் எனப் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் குற்றம்சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் புதுடெல்லியும், பாகிஸ்தானின் லாகூரும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றன. ஏற்கனவே இரு நகரங்களிலும் காற்றின் தரம் கவலைக்கிடமாக உள்ள நிலையில் தான், கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டின. வானவேடிக்கைகளால் நகரங்கள் வண்ணமயமாக மின்னினாலும், பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னை, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் காற்று மாசுபாடு மேலும் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, புதுடெல்லி காற்றின் தரக்குறியீடு 400-ஐக் கடந்திருக்கிறது. அதேபோல, பாகிஸ்தானின் லாகூரில் தீபாவளிக்கு அடுத்தநாளான திங்கட்கிழமை காலை காற்றின் தரக்குறியீடு 600-ஐ கடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச்சூழலில் தான், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண மூத்த அமைச்சர் மரியம் அவுரங்கசீப் (Marriyum Aurangzeb), இந்தியாவின் அமிர்தசரஸ், லூதியானா, ஜலந்தர், பதிண்டா உள்ளிட்ட நகரங்களில் இருந்து காற்று மாசுபாடு லாகூருக்குள் கிழக்கு திசை காற்று வழியாக பரவியதாகவும், தீபாவளி கொண்டாட்டத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் புகையும், விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதால் உருவான புகையும் காற்று மாசுபாட்டை அதிகரித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இவ்வாறு, பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், லாகூரில் காற்று மாசுபாடு ஏற்படுவதற்கு இந்தியா மட்டுமே காரணம் என்ற காரணம் அறிவியல் பூர்வமான தரவுகள் இல்லை. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலும் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதற்கிடையே, லாகூரில் மேற்கொள்ளப்பட்ட புகைமூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரம் ஓரளவு மேம்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு, காற்று மாசுபாடு என்பது இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கும் பொதுவான சுற்றுச்சூழல் பிரச்சினையாக தற்போது மாறியிருக்கிறது.

Pakistan Blames India for Lahore’s Rising Air Pollution
மது நுகர்வில் புதிய போக்கு.. உலகிற்கு எதிர்திசையில் இந்தியா.. அமெரிக்கா, சீனாவை முந்தியது!