நடுவானில் பறந்த விமானத்திலிருந்து பெயர்ந்து விழுந்த கதவு.. அச்சத்தில் பயணிகள்.. வைரல் வீடியோ!

அமெரிக்காவில் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் கதவு பெயர்ந்து விழுந்தததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
அமெரிக்க விமானம்
அமெரிக்க விமானம்ட்விட்டர்

சமீபகாலமாக விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர, சில அநாகரிகச் செயல்களும் பயணிகளை பதைபதைப்புக்கு உள்ளாக்குகின்றன. அப்படியான சிலவற்றால், திடீரென உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

இன்னொருபக்கம் சில நேரம், பயணிகள் சிலர் முன்னெச்சரிக்கையின்றி அவசரகால வழிக்கான கதவுகளைத் திறக்கும் செயல்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவில் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் கதவு பெயர்ந்து விழுந்ததில் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

இதையும் படிக்க: நியூசிலாந்து: நாடாளுமன்ற அவையை அதிரவிட்ட இளம் பெண் எம்.பி.... வைரல் வீடியோ!

அமெரிக்காவின் போர்ட்லேண்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று நேற்று (ஜன.5) புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் 171 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம் நடுவானில் 16,325 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் மையப் பகுதியில் இருந்த கதவு பெயர்ந்து, பறந்து சென்றது. இதனைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். பயணிகளில் சிலர் இதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

இதன்பின் உடனடியாக விமானம் போர்ட்லேண்ட் விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது. விமானம் பாதுகாப்பாக நேற்றிரவு அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி முதல் வர்த்தக பயன்பாட்டுக்கு வந்த இந்த போயிங் ரக விமானம், இதுவரை 145 முறை விமான பயணத்தில் ஈடுபட்டு உள்ளது என பிளைட்ராடார் 24 என்ற விமான இயக்க கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படிக்க: ‘ஏறு தழுவுதல்’ ‘சல்லிக்கட்டு’: சங்க இலக்கியம் To நவீன நாவல்! தமிழர் வாழ்வில் ஜல்லிக்கட்டு கலாசாரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com