அதிபர் ட்ரம்ப் pt
உலகம்
பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்கா... இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் டிரம்ப்!
இது குறித்த தகவலை காணலாம்.
இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், அதுதொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று வெளியிடுகிறார்.
விரி விதிப்பு தொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை செயலாளர் கரோலின் லீவிட், அமெரிக்காவின் பால் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம், 50 சதவீத வரி விதிப்பதாக கூறினார்.
அமெரிக்காவின் அரிசிக்கு ஜப்பான் 700 சதவீத வரி விதிப்பதாகவும், அமெரிக்காவின் வேளாண் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிப்பதாகவும் கூறினார். இதனால், இந்த நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், பல அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, தங்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் அதே அளவிலான வரி, அந்தந்த நாடுகளுக்கு விதிக்கப்படவுள்ளதாகக் கூறினார்.