donald trump sets deadline for release of hamas hostages
ஹமாஸ், ட்ரம்ப்எக்ஸ் தளம்

பிணைக்கைதிகள் விவகாரம் | பிப்.15 வரை கெடு.. ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

”காஸாவில் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகளை வரும் 15ஆம் தேதிக்குள் விடுவிக்காவிட்டால் மிகமோசமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Published on

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், தற்போது நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறி வருகின்றன. இதற்கிடையே, பிணைக் கைதிகளில் சிலர் மட்டுமே திரும்ப அனுப்பப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை அனுப்புதை ஹமாஸ் நிறுத்திவைத்துள்ளது. இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக கூறி கைதிகளை விடுவிப்பதை ஹமாஸ் நிறுத்தியுள்ளது.

donald trump sets deadline for release of hamas hostages
ட்ரம்ப்எக்ஸ் தளம்

இந்த சூழலில் ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், ”காஸாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணயக்கைதிகள் அனைவரும் வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி மதியத்திற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும். அப்படி அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், மிகமோசமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விடுவேன். காஸாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால், அந்நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.

donald trump sets deadline for release of hamas hostages
எச்சரித்திருந்த ட்ரம்ப்...போர் நிறுத்த ஒப்பந்தம் போட்ட இஸ்ரேல் - ஹமாஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com