\
Donald Trump Pauses Taiwan Arms Deal Amid Iran War
தைவான், அமெரிக்காராய்ட்டர்ஸ்

தைவானுக்கு ஆயுத விற்பனை.. திடீரென நிறுத்திய அமெரிக்கா.. காரணம் சீனாவா?

”அமெரிக்காவும் சீனாவும் மோதலைத் தவிர்க்க தைவானைக் கவனமாகக் கையாள வேண்டும்” என சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
Published on

தைவானுக்கு வழங்கவிருந்த 1,400 கோடி டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. ஈரான் போரால் அமெரிக்க ராணுவத்தின் ஆயுதக் கையிருப்பு குறைந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே நீண்டகாலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. சீனக் கடல் பகுதி அமைந்துள்ள ஒரு சிறு தீவே, தைவான். சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-இல் தனி நாடாகப் பிரிந்தது. ஆனால், தைவானை தனி நாடு அல்ல என்றும், அது சீனாவின் ஒரு பகுதி என்றும் தொடர்ந்து சீனா சொல்லிவருகிறது. இதற்கு தைவான் அரசு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தைவான் அதிபர் லாய் சிங் தேவ்-ஐ பிரிவினைவாதி என்றும், தைவான் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சீனா தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்துவருகிறது. தவிர, தைவானை அச்சுறுத்தும் விதமாக போர்ப் பயிற்சியிலும் சீனா ஈடுபடுவது வழக்கமாக உள்ளது.

டொனால்டு ட்ரம்ப், ஜின்பிங்
டொனால்டு ட்ரம்ப், ஜின்பிங்

இந்த நிலையில், தைவானுக்கு வழங்கவிருந்த 1,400 கோடி டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. ஈரான் போரால் அமெரிக்க ராணுவத்தின் ஆயுதக் கையிருப்பு குறைந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த ஆயுத ஒப்பந்தத்தை சீனாவுடனான பேச்சுவார்த்தையில் ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ள நிலையில், தங்களின் பாதுகாப்புக்கு ஆயுதங்கள் அவசியம் என தைவான் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது.

Donald Trump Pauses Taiwan Arms Deal Amid Iran War
”மீண்டும் இணைப்பது காலத்தின் கட்டாயம்” - சீன அதிபரின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்த தைவான்!

முன்னதாக, ”தைவான் விவகாரத்தை அமெரிக்கா தவறாகக் கையாண்டால் சீன-அமெரிக்க உறவு பல மடங்கு மோசமாகும். இருநாட்டு உறவில் தைவான்தான் முக்கியமான அம்சம். தைவானுக்குத் தனிநாடும் வேண்டும், தைவான் நீரிணையில் அமைதியும் வேண்டும் என்றால் அது நடக்காது.

டொனால்டு ட்ரம்ப், ஜின்பிங்
டொனால்டு ட்ரம்ப், ஜின்பிங்ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவும் சீனாவும் மோதலைத் தவிர்க்க தைவானைக் கவனமாகக் கையாள வேண்டும்” என சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தைவானுக்கு அமெரிக்காவே ஆயுதங்களை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Donald Trump Pauses Taiwan Arms Deal Amid Iran War
தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா இராணுவப் பயிற்சி., ஜப்பான் வெளியிட்ட முக்கிய அறிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com