உலகம்
டிரம்ப் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு தள்ளுபடி: ஜார்ஜியா மாகாண நீதிமன்றம் அதிரடி
டிரம்ப் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு தள்ளுபடி: ஜார்ஜியா மாகாண நீதிமன்றம் அதிரடி
வாக்கு எண்ணிக்கையில் மாநில விதிகளை பின்பற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்க நீதிபதி மறுப்பு.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தரப்பில் தொடரப்பட்ட தேர்தல் வழக்கினை ஜார்ஜியா மாகாண நீதிபதி தள்ளுபடி செய்தார். வாக்கு எண்ணிக்கையில் மாநில விதிகளை பின்பற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்க நீதிபதி மறுப்பு.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டு நாட்களாக இழுபறியில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜோ பிடன் 264 வாக்குகளையும், டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
முன்னதாக, வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று டிவிட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.