\
Did Iran use Musk’s Starlink in attacks against US during war?
IranReuters

ஈரானுக்கு உதவிய எலான் மஸ்க்? அதிர்ச்சியின் உச்சியில் அமெரிக்கா! ஈரான் செய்த தந்திரம்?

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணையசேவையை ஈரான் ராணுவ தாக்குதல் நடவடிக்கைக்காக பயன்படுத்தியுள்ளது என்று, பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

அணு ஆயுத சோதனையில் ஈடுபடுதாக கூறி, கடந்த பிப்ரவரி மாதம் அன்று, ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டுத் தாக்குதலை நடத்தின. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, அன்டை நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறி வைத்து தாக்கிய ஈரான், ஹார்முஸ் நீரிணையையும் மூடி, உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. பல மாதங்களாக இந்த போர் நடந்து வரும் போதிலும், இன்னும் அமைதி உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த போரில் ஈரான் மேற்கொண்ட ஒரு தந்திரமான விஷயம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, தி வாஷிங்க்டன் போஸ்ட் என்ற ஊடக நிறுவனம், புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

starlink
starlinkReuters

அதில், எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனத்துக்குச் சொந்தமான Starlink இணையச் சேவையைப் பயன்படுத்தி அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. Starlink சேவையை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதை SpaceX நிறுவனம் கண்டறிந்ததாகவும், இந்த விவகாரம் எலான் மஸ்க்குக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், ஈரான் ராணுவம் Starlink-ஐப் பயன்படுத்தியது தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத்திடம் ரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த அறிக்கை குறித்த தகவல் தங்களுக்குத் தெரியாது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும் ரஷ்யா–உக்ரைன் போரில் Starlink தொழில்நுட்பத்தின் ராணுவப் பயன்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஷ்யாவின் ட்ரோன்கள் Starlink சேவையைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இவ்வாறு ஒரே செயற்கைக்கோள் இணையச் சேவை பொதுமக்களின் தகவல் தொடர்புக்கும், ராணுவ நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவது புதிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பக் கேள்விகளை, உலக அரங்கில் எழுப்பியுள்ளது.

Did Iran use Musk’s Starlink in attacks against US during war?
பிரபல மல்யுத்த வீரர் மரணம்! WWE நிர்வாகம் திடீர் அறிவிப்பு!அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!