பிரபல மல்யுத்த வீரர் மரணம்! WWE நிர்வாகம் திடீர் அறிவிப்பு!அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
செய்தியாளர் - கார்த்திகேயன்
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பகுதியில் பிறந்தவர் ஜெர்மைன் ஹோலி. கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று WWE நிறுவனத்தில் இணைந்த பிறகு, தனது பெயரை ப்ரான்சன் ரீட் என்று மாற்றிக் கொண்டார். NXT North American Championship பட்டத்தை வென்றுள்ள இவர், Andre the Giant Memorial Battle Royal போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், New Japan Pro-Wrestling மற்றும் Impact Wrestling ஆகிய நிறுவனங்களிலும் போட்டியிட்டுள்ளார். இவ்வாறு பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ப்ரான்சன் ரீட், கடந்த நவம்பர் 7-ஆம் தேதி அன்று, சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற WWE Crown Jewel நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது, ஒபா ஃபெமி உடனான மோதலின்போது, மேடையில் இருந்து கீழே இருந்த மேசைகள் மீது அவர் தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவத்தில், பல விலா எலும்பு முறிவுகள் ஏற்பட்டதோடு, சிறுநீரகத்தில் காயம் உண்டானதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சவுதி அரேபியாவிலேயே தங்கி, பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இப்படியான சூழ்நிலையில், WWE நிர்வாகம் அதிர்ச்சி அளிக்கும் வகையிலான, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, “ஜெர்மைன் ஹேலி மருத்துவ சிக்கல் காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் ஒரு சிறந்த மல்யுத்த வீரர் மட்டுமல்லாமல், அன்பான மனிதராகவும் இருந்தார்.
குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர் மற்றும் அனைவராலும் நேசிக்கப்பட்ட சக ஊழியர்.” என்று, தனது அறிக்கையில், WWE நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், அவரது மரணத்திற்கான மருத்துவ காரணம் என்னவென்று, அந்த அறிக்கையில் எந்தவொரு தகவல்களும் இடம்பெறவில்லை. ப்ரான்சன் ரீட்டுக்கு மனைவி Paige மற்றும் ஒரு மகள் உள்ளனர். மேலும், அவரது மனைவி தற்போது இரண்டாவது குழந்தையை கர்ப்பமாக உள்ளார். அவரது மறைவு குடும்பத்தினர், நண்பர்கள், சக மல்யுத்த வீரர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதிலேயே அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பது மல்யுத்த உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும்.

