crypto influencer rejects elon musk proposal to have his child
டிஃப்பனி ஃபாங்எக்ஸ் தளம்

எலான் மஸ்க்கின் குழந்தையைப் பெற்றெடுக்க மறுத்த பிரபலம்.. யார் இந்த டிஃப்பனி ஃபாங்?

கிரிப்டோகரன்சி இன்ஃப்ளூயன்ஸரான டிஃப்பனி ஃபாங் (Tiffany Fong) என்பவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் குழந்தைக்கு தாயாக மறுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
Published on

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநருமான எலான் மஸ்க், தற்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் அமைச்சரவையில் செயல்படும் DOGE துறையில் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 14 குழந்தைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் குழந்தைக்கு தாயாக மறுத்ததாக, கிரிப்டோகரன்சி இன்ஃப்ளூயன்ஸரான Tiffany Fong என்பவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியைச் சேர்ந்த டிஃப்பனி ஃபாங் என்பவருடன் கடந்த ஆண்டு முதல் தமது எக்ஸ் பக்கத்தின் ஊடாக எலான் மஸ்க் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், தமது குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் மஸ்க் வைத்துள்ளார். உலகில் மிகவும் புத்திசாலியான பிள்ளைகள் பலரைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்துடன் எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில்தான் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஃபாங், மிகவும் பாரம்பரியமான குடும்பத்தையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், தாம் கர்ப்பிணியாக இருப்பதாக என கசிந்துள்ள வதந்திகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், அது உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார்.

crypto influencer rejects elon musk proposal to have his child
டிஃப்பனி ஃபாங்எக்ஸ் தளம்

யார் இந்த டிஃப்பனி ஃபாங்?

1994ஆம் ஆண்டு லாஸ் வேகாஸில் பிறந்த ஃபாங், 2016இல் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் பட்டப்படிப்பை முடித்தார். கோவிட் காலகட்டத்தில் Celsius Network நிறுவனத்தின் கிரிப்டோவில் 200,000 டாலர் முதலீடு செய்து மொத்த தொகையையும் இழந்தார். Celsius Network நிறுவனம் 2022இல் திவாலானதாக அறிவித்ததே காரணம். அப்போது ஃபாங் வெளியிட்ட காணொளி ஒன்று 85,000 பார்வையாளர்களைக் கடந்து பெரும் கவனத்தை ஈர்த்தது. மட்டுமின்றி, 2022ல் FTX கிரிப்டோ நிறுவனம் கடும் பின்னடைவை சந்தித்ததன் பின்னணியையும் ஃபாங் அம்பலப்படுத்தினார்.

crypto influencer rejects elon musk proposal to have his child
குழந்தை விவகாரம் | எழுத்தாளர் - எலான் மஸ்க் இடையே வெடித்த மோதல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com