UNESCO உலக பாரம்பரிய தளங்களை அதிகம் கொண்ட நாடுகள் பட்டியல் - இந்தியாவுக்கு எந்த இடம்?
UNESCO தனது 2024-ம் ஆண்டுக்கான உலக பாரம்பரிய தளங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அதிக தளங்கள் இருக்கும் முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்? பார்க்கலாம்...
UNESCO என்பது என்ன?
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு UNESCO. உலகின் கலாசார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாத்து மேம்படுத்துவதே UNESCO-வின் நோக்கம். இது பிரான்சின் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
1945 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த உலகளாவிய மதிப்பைக் கொண்டதாகக் கருதப்படும் தளங்களை இது பட்டியலிட்டு வருகிறது.
UNESCO பட்டியல்
இதன்படி UNESCO-வின் 2024ம் ஆண்டுக்கான பட்டியலில் 166 நாடுகளில் இருக்கும் 1,172 உலக பாரம்பரிய தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில், அதிக தளங்களை கொண்ட முதல் பத்து இடங்களை பிடித்த நாடுகளையும், அங்குள்ள உலக பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும் பட்டியலிட்டுள்ளது UNESCO.
இப்பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் 42 பாரம்பரிய தளங்களை உள்ளடக்கியதாக உள்ளது. முதலிடத்தை இத்தாலியும், இரண்டாவது இடத்தை சீனாவும் பிடித்துள்ளன.
முதல் பத்து நாடுகள் என்னென்ன?
இத்தாலி - 59 பாரம்பரிய தளங்கள்
சீனா - 57 பாரம்பரிய தளங்கள்
பிரான்ஸ் - 52 பாரம்பரிய தளங்கள்
ஜெர்மனி - 52 பாரம்பரிய தளங்கள்
ஸ்பெயின் - 50 பாரம்பரிய தளங்கள்
இந்தியா - 42 பாரம்பரிய தளங்கள்
மெக்சிகோ - 35 பாரம்பரிய தளங்கள்
ஐக்கிய ராஜ்ஜியம் - 33 பாரம்பரிய தளங்கள்
ரஷ்யா - 31 பாரம்பரிய தளங்கள்
ஈரான் - 27 பாரம்பரிய தளங்கள்