\
corendon airlines hijack alert fighter jets safety
Model imagegoogle gemeni

நடுவானில் மீண்டும் சம்பவம்.. பயணிகள் விமானம் கடத்தலா? பறந்துசென்ற போர் விமானங்கள்!

இந்த சம்பவம் காரணமாக, நியூரம்பெர்க் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. தரையிறங்க வேண்டிய பிற விமானங்கள் வேறு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.
Published on: 
Summary

தெற்கு ஜெர்மனியில் உள்ள கோர்ஃபுவிலிருந்து நியூரம்பெர்க்கிற்கு கோரெண்டன் ஏர்லைன்ஸ் (Corendon Airlines) பறந்துசென்ற நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொடர்பு கோளாறு காரணமாக, ஜெர்மனி வான்படை போர் விமானங்களை விரைந்து அனுப்பி அவசரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

துபாயில் இருந்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி டெல் அவிவ் நோக்கிச் சென்ற 'ஃப்ளைதுபாய்' (FlyDubai FZ1073) விமானத்தில் நிகழ்ந்த நடுவானில் தாக்குதல் முயற்சி சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து விமான நிறுவனங்கள் தீவிர ஆய்வையும் பாதுகாப்பையும் மேம்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், கோரெண்டன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737-800 விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானக் கடத்தலைக் குறிக்கும் அவசரக் குறியீடான '7500' கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டது.

அதேசமயம், விமானிகளுடனான ரேடியோ தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, கடத்தல் அச்சுறுத்தல் உண்மையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், நேட்டோ மற்றும் ஜெர்மன் வான்படையின் நியூக்பர்க் (Neuburg) தளத்திலிருந்து இரண்டு யூரோஃபைட்டர் (Eurofighter) போர் விமானங்கள் உடனடியாகப் புறப்பட்டுச் சென்று பயணிகள் விமானத்தைச் சூழ்ந்து பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தன.

corendon airlines hijack alert fighter jets safety
Flydubai சம்பவம் | அமெரிக்கா, இஸ்ரேல் விமானங்களுக்குக் குறி.. அடுத்த திட்டம் போடும் அல்கொய்தா?

முன்னதாக குரோஷிய வான்பரப்பிலும் போர் விமானம் கண்காணிப்பில் ஈடுபட்டது. பின்னர், போர் விமானங்களின் துணையுடன் அந்தப் பயணிகள் விமானம் நியூரம்பெர்க் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் விமானத்திலிருந்த 178 பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. விமானத்திலுள்ள தகவல் தொடர்பு சாதனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழையே இந்தக் கடத்தல் எச்சரிக்கைக் குறியீடு தவறுதலாகப் பதிவானதற்குக் காரணம் என விமான நிறுவனம் மற்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக, நியூரம்பெர்க் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. தரையிறங்க வேண்டிய பிற விமானங்கள் வேறு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. மேலும், இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

corendon airlines hijack alert fighter jets safety
உலகை உலுக்கிய Flydubai சம்பவம்! ஈரான் மீது திரும்பும் சந்தேகம்.. கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com