”இந்தியா எங்களின் பரம எதிரி”-பாக். ராணுவ தளபதியின் சர்ச்சை பேச்சு! இருநாட்டு உறவில் மேலும் சிக்கல்!

”இந்தியா எங்களின் பரம எதிரி” என பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனிர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது இரு நாடுகளுக்கிடையே சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான்புதிய தலைமுறை

பாகிஸ்தானின் ரிஸல்பூரில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி மைய அணிவகுப்பில் கலந்துகொண்ட அசிம் முனிர், ”இந்தியா எங்களின் பரம எதிரி. இந்தியா, சட்டவிரோதமாக காஷ்மீரைப் பிடித்துக் கொண்டிருக்கிறது” எனப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2019இல் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய சூழலைக் குறிப்பிட்டு அவ்வாறு பேசிய அவர், ”காஷ்மீருக்கு தொடர்ந்து தார்மீகரீதியாக, அரசியல் உயர்மட்டரீதியாக ஆதரவு அளிப்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவு முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் பொதுத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்தியாவிலும் பொதுத் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஜம்மு - காஷ்மீரிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனிர், இப்படிப் பேசியிருப்பது இரு நாடுகளின் உறவுகளுக்கு இடையே மீண்டும் சிக்கலை உருவாக்கி உள்ளது.

இதையும் படிக்க: பாலியல் குற்றச்சாட்டு புகார்|பிரிஜ் பூஷன் சிங்கிற்குப் பதில் அவரது மகனுக்கு சீட்.. பாஜக அறிவிப்பு

பாகிஸ்தான்
ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல்.. 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. இந்திய ராணுவமும் பதிலடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com