ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஃபைல்ஸ்
ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஃபைல்ஸ்web

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்| ’சிறுமிகள் பாலியல் to மனித மாமிச விருந்து..?’ A to Z முழு விவரம்!

மறைந்த அமெரிக்க செல்வந்தர் மற்றும் குழந்தைகள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்க செல்வந்தர் மற்றும் நிதியாளர், 2019ஆம் ஆண்டு சிறுமிகளை கடத்தி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவரது மரணம் பல மர்மங்களை எழுப்பியது. நீதித்துறை விசாரணையில் பல முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகின. இது உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

ஜனவரி 30ஆம் தேதி வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தரவுகளில் சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ, பிரதமர் மோடி, பில் கேட்ஸ், எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான்சன் போன்றோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

ஜெஃப்ரி எப்ஸ்டீன்
ஜெஃப்ரி எப்ஸ்டீன்

அமெரிக்காவின் பெரும் செல்வந்தரும் நிதியாளருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் கடந்த 2019ஆம் ஆண்டு 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கடத்தி அவர்களை பெரும் செல்வந்தர்களின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார். அதற்கு முன்பு வரை ஜெஃப்ரி எப்ஸ்டீன் பெயர் அதிக அளவில் பொதுவெளியில் அதிகம் வராமல் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி எப்ஸ்டீன் பார்த்துக்கொண்டார்.

கரீபியன் பகுதியில் தனி தீவு, நியூயார்க், பாரிஸ், மெக்சிகோ இன்னும் பல நாடுகளில் விலை உயர்ந்த வீடுகள். அரசின் உயர் அதிகாரிகள், பெரும் செல்வந்தர்கள் உடனான தொடர்பு, அடிக்கடி அழகான இளம் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள். இதுதான் ஜெஃப்ரி எப்ஸ்டீன் பற்றிய பிம்பம் சமூகத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன்
ஜெஃப்ரி எப்ஸ்டீன்

எப்ஸ்டீன் எப்படி சிக்கினார்?

2003ஆம் ஆண்டு அமெரிக்க பத்திரிகையாளர் விக்கி வார்டுக்கு ஜெஃப்ரி எப்ஸ்டீன் பற்றி ஒரு செய்தி எழுதுமாறு தனது ஆசிரியரிடம் இருந்து ஒரு உத்தரவு வருகிறது. இதற்காக அவர்மேற்கொண்ட ஆய்வின் போது ஜெஃப்ரி எப்ஸ்டீன் வெறும் நிதியாளர், பணக்காரர் என்பதை கடந்து அவரிடம் வேறு சில மர்மமங்கள் இருப்பதை அவர் கண்டறிகிறார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் 1996ஆம் ஆண்டு மரியா ஃபார்மர் என்கிற பெண்ணும் அவருடைய 14 வயது தங்கையும் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டதையும் அவர்கள் அதை காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் கண்டறிந்தார். இந்த விவகாரத்தை தனது கவர் ஸ்டோரியில் எழுத விக்கி வார்டு முயலும்போது ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிறுவன ஆசிரியர் மூலம் அந்த பகுதியை நீக்கிவிட்டு எப்ஸ்டீன் குறித்த நல்ல தகவல்கள் மட்டுமே வெளிவருமாறு பார்த்துக்கொண்டார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஃபைல்ஸ்
’யார் சாமி நீ..’ பழைய சிம் கார்டுகளிலிருந்து 191 கிராம் தங்கம்.. 26 லட்சத்தை அள்ளிய நபர்!

சிறையில் தற்கொலை.. தொடரும் மர்மம்!

தொடர்ந்து 2006ஆம் ஆண்டு 14 வயது சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைதுசெய்யப்பட்டு 13 மாதங்கள் சிறையில் இருந்தார். அதன்பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த எப்ஸ்டீன் 2019ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சில காலங்களிலேயே தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் தற்கொலையில் இப்போதுவரை பல மர்மங்கள் நீடிக்கிறது. திடீரென அவர் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன? அவர் தற்கொலை செய்துகொண்ட நேரத்தில் அவரது அறையை சுற்றி இருந்த அனைத்து பாதுகாப்பு கேமராவும் செயலலிழந்து போனது எப்படி போன்ற பல்வேறு விவாதங்கள் எழுப்பப்பட்டன.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் மறைவு அவரது பின்புலம் குறித்த கேள்விகளையும் விவாதங்களையும் சமூகத்தில் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் பல்வேறு முக்கிய உலக தலைவர்கள் மற்றும் பணக்காரர்கள் வாடிக்கையாளராக இருந்ததாகவும் அவர்களின் பெயர்களை காப்பற்றவே அவரை கொலை செய்ததாகவும் கூட பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும் FBI-யிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் விசாரணையில் வாடிக்கையாளர் குறித்த பட்டியல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த தகவலுக்கு அமெரிக்காவின் FBI மறுப்பு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தான் இந்த வழக்கின் விசாரணை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றும் இதுதொடர்பான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும் அமெரிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன் அடிப்படையில் அமெரிக்க நீதித்துறை ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் யாருடன் மெயில் தொடர்பு கொண்டிருந்தார், அவருக்கு யாரிடம் இருந்து மெயில் வந்துள்ளது மற்றும் பல்வேறு புகைப்படம் மற்றும் வீடியோக்களும் அடங்கும்.

இந்த ஆதாரங்கள்தான் தற்போது ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ளது. காரணம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் மெயில் தொடர்பு மற்றும் புகைப்படங்களில் பல்வேறு உலக தலைவர்கள் குறிப்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தொடங்கி விஞ்ஞானி ஸ்டீப்பன் ஹாக்கிங், தொழிலதிபர் பில் கேட்ஸ் போன்ற பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஃபைல்ஸ்
இந்தியாவுக்கு 18% வரி.. அமெரிக்காவுக்கு 0% வரியா..? டிரம்பின் அழுத்தத்துக்கு அடிபணிந்ததா இந்தியா..?

டிரம்ப் முதல் மோடி வரை அடிபடும் பெயர்கள்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த பட்டியலில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப் பெயரும் இருக்கிறது என்றும் அதை அமெரிக்க அரசாங்கம் மறுப்பதாகவும் ஒரு பதிவு வெளியிட்டு பின்னர் அதை டெலிட் செய்தது பெரும் பேசுபொருளானது. இருப்பினும் டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

இந்த நிலையில்தான் சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுகளில் இந்திய தொழிலதிபர் அம்பானி, பிரதமர் மோடி, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் போன்றோரின் பெயர்களும் இமெயில்களில் இடம்பெற்று உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்திக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

trump
trumpx page

இந்த விவகாரத்தை பொறுத்தவரை இமெயில்களில் பெயர்கள் குறிப்பிட்ட அனைவரும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்று கூறிவிட முடியாது. அவர்களின் பெயர்களை மூன்றாம் நபர்கள் பயன்படுத்தி இருக்கிறார்களே தவிர அவர்கள் அனைவரும் நேரடி தொடர்பு என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என ஒரு தரப்பினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே சமீபத்தில் வெளியிடப்பட்ட சில Documentary மற்றும் ஆவணங்களின் படி அங்கு சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதை தவிர மனித மாமிசம் கொண்ட விருந்து நடத்தப்பட்டதாகவும் மேலும் குழந்தைகளை பலியிட்டதாகவும் போன்ற பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதுகுறித்த வெளியாகும் தகவல்களை நிரூபிக்க போதிய தரவுகள் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

மோடி
மோடி

இதற்கிடையே ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் இணைந்து சிறுமிகளை மோசமாக கொடுமை படுத்தியது மற்றும் பாலியல் கொடுமைகள் செய்த விவகாரத்தில் எப்ஸ்டீன் காதலி Ghislaine Maxwell -க்கு 2022ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இவர் தற்போது டெக்சாஸ் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஃபைல்ஸ்
உலகை அதிரச் செய்யும் 'எப்ஸ்டீன் கோப்புகள்'.. அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்.. பின்னணி என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com